பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{ { - - o ஒன்றரை மணி நேரமா பேசுகிறீர்கள்?" "ஆமாம்,' “எத்தனை பாடல்கள் சொல்வீர்கள்?" "அநேகமாக ஒரு பாடலுக்கு விளக்கம் சொல்வேன். சில சமயங்களில் பாதிப் பாடலோடு நின்றாலும் நின்றுவிடும்." "அந்தப் பாடல்கள் அவ்வளவு கடினமானவையா? பொருளை விளக்க அவ்வளவு நேரம் எதற்கு?" "நான் பாடலை விளக்குவதில்லை; அதாவது அதில் உள்ள சொற்களுக்குப் பொருளை விளக்குவதோடுமட்டும் நிற்ப தில்லை. அந்தப் பொருளையே விளக்குகிறேன்.” - "பொருளை விளக்குவதென்றால் எனக்கு விளங்கவில்லை. அதை முதலில் எனக்கு விளக்குங்கள்." - "முசியாமல் இட்டு மிடிக்கின்றிலை என்று ஒரு பாட்டில் வருகிறது. சலிக்காமல் பிறருக்கு ஈந்து அதனால் வறுமையைப் பெறாமல் இருக்கிறாயே என்று சொல்லி நிறுத்தினால் சொற் களுக்குப் பொருள் சொன்னதாக இருக்கும். ஏன் இடவேண்டும், இட்டு மிடிப்பதனால் பயன் என்ன, சலிப்பு வருவது இயல்புதானே என்று கேள்விகளை எழுப்பிக் கொண்டு, விடை சொல்ல முயல்கிறேன். ஈகை என்பது நமக்கும் பிறருக்கும் பயனை உண்டாக்குகிறதென்று விளக்குகிறேன். பற்றறுப்பதற்கு இது அடையாளமாவதையும் சொல்கிறேன். இவற்றிற்கு மேற்கோள், வரலாறு, அநுபவம் என்று இப்படியே அந்தப் பொருளை விளக்கும் உரை விரிகிறது." - கந்தர் அலங்கார விரிவுரை எவ்வாறு நடக்கிறது என்பதை உணர்ந்து கொள்ள வந்த நண்பர் ஒருவருக்கும் எனக்கும் நடந்த உரையாடல் இது. கந்தர் அலங்காரப் பாட்டுக்குச் சொற்பொருள் மட்டும் சொல்லி முடிப்பதனால் பெரிய பயன் ஒன்றும் இல்லை. தமிழ் இலக்கியங்கள் பல உள்ளன; அவற்றைப் படித்துக்