பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழனித் திருநாமம் பெரியவரின் நல்லுரை ஒரு பெரியவர் ஒர் இளைஞனுக்கு நல்லுரை கூற வந்தார். அவன் சரியானபடி நடக்காமையினால் இன்ன இன்ன செய்ய வேண்டுமென்று அவர் சொல்லலானார். "ஹைஸ்கூலுக்குப் போய்ப் படிக்க வேண்டும். முதல் வகுப்பில் தேர்ச்சி பெற வேண்டும். பின்பு காலேஜுக்குப் போக வேண்டும். அங்கே பாடமாக உள்ள நூல்களைப் படித்துத் தெளிவு பெற்றுத் தேர்ச்சி பெறவேண்டும். அப்போதுதான் உத்தியோகம் கிடைக்கும்' என்று சொன்னார். அதைக் கேட்டவுடன் அந்த இளைஞனுக்கு ஒரே பிரமிப்பாக இருந்தது. 'அப்படியெல்லாம் செய்வதற்கும் நமக்கும் நெடுந்துரம்' என்று எண்ணி மயங்கி நின்றான். பேசியவருக்குக் கொஞ்சம் கருணை பிறந்தது. "சோம்பித் திரிந்து கொண்டிருக்கிறாயே. இவ்வளவு பெரிய காரியங்களை எல்லாம் செய்ய வேண்டும் என்று சொன்னவுடன் மயங்குகிறாயே. புத்தகத்தை எடுத்துப் படிக்காமல் இருக்கிறாயே, கேட்டவுடன் சொல்ல வேண்டுமென்று நெட்டுருப் பண்ணாமல் இருக்கிறாயே. பள்ளிக் கூடத்தைப் பற்றிக் கவலைப்படாமல், சம்பளம் கட்டு வதற்கு என்ன வழி என்று ஆலோசிக்காமல், சும்மா வழியில் போகிறாயே என்று பின்பு எளிய முறைகளைச் சொன்னார். அதுவும் இதுவும் அவ்வண்ணமே அருணகிரியார் சென்ற பாட்டில், "அராப்புனை வேணியன் சேய் அருள் வேண்டும் அவிழ்ந்த அன்பால் குராப்புனை தண்டையந் தாள் தொழல் வேண்டும் கொடிய ஐவர் பராக்கறல் வேண்டும் மனமும் பதைப்பு அறல் வேண்டும்"