பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 5 வேல்குமரற்கு அன்பிலாதவர் ஞானம் மிகவும் நன்றே! என்று அருணகிரிநாதர் அவர்களைப் பார்த்துப் பரிகாசம் பண்ணு கிறார். ஆருயிர்களிடத்தில் அன்பு இல்லாதவர்களுக்கு, அந்த ஆருயிர்களின் தலைவனாகிய ஆண்டவனிடத்திலும் அன்பு இருக்க நியாயம் இல்லை. முருகப் பெருமான் திருக்கையில் வேலை வைத்திருக்கிறான். அது ஞானமயமானது. உண்மை ஞானம் என்பது இறைவனையும், உலகத்திலுள்ள ஆருயிர்களை யும் ஒன்றாகப் பார்த்து அன்பு செய்வது. எவனுக்கு ஜீவகாருண் யம் இல்லையோ அவனுக்கு இறைவன் கருணை கிடைக்காது. இறைவன் கோயிலுக்குச் சென்று பலவகையான நிவேதனங் களைச் செய்து வழிபடுகின்றவர் பசித்து வரும் ஏழைக்கு ஒரு பிடி உணவு தராவிட்டால் அத்தனை நிவேதனமும் ஆண்டவனால் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. ஆருயிர்களிடத்தில் அன்பு செய்யாதவனுடைய அன்பை இறைவன் அன்பாகக் கொள்வ தில்லை. அருட்பிரகாசவள்ளலார் இந்தக் கருத்தை வெளியிடுகிறார். அவர் இறைவனிடத்தில் ஒரு விண்ணப்பம் செய்து கொண் டார். 'எம்பெருமானே அடியேன் கூறும் விண்ணப்பத்தைத் திருச்செவியில் ஏற்றுக் கொண்டு அருள வேண்டும் என்கிறார். "அப்பா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும்.” இறைவனுடைய பெருமைகளை உலகத்திற்கு எல்லாம் சொல்ல வேண்டும் என்பது அவருடைய ஆசை. அப்படிச் சொல்வதற்குக் காரணம் உயிர்க்கூட்டங்கள் உய்ய வேண்டும் என்பதே. இறைவ னுடைய பெருமையை விளம்பரப்படுத்த வேண்டும் என்பது அவருடைய நோக்கம் அன்று. உயிர்கள் தம்முடைய சிறுமையை உணர்ந்து, அந்தச் சிறுமையைப் போக்கும் அருட்பெருமானாகிய இறைவனைப் பற்றித் தெரிந்துகொண்டு அவன் அருளுக்கு ஆளாக வேண்டும். அப்போதுதான் உய்யலாம். இந்தக் கருத்தை உலகத்து ஆருயிர்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்று அவர் ஆசைப்படுகிறார். தாம் தெரிந்துகொண்டதைப் போலச் சாமான்ய உயிர்களும் தெரிந்துகொண்டால் உலகமே இன்பமயமாகும் என்பது அவர் எண்ணம். இந்த எண்ணத்திற்கு மூலகாரணமாக இருப்பது 16