பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீர்க்குமிழி ஆருயிர்களிடத்தில் அவருக்கு உள்ள அன்பு. ஆகவே இறை வனிடத்தில் விண்ணப்பம் செய்து கொள்கிற அவர் முதலில், "ஆருயிர்கட்கெல்லாம் நான் அன்புசெய்தல் வேண்டும்" என்கிறார். உயிர்களிடத்தில் அன்பு செய்ய இயலாதவன் இறைவனிடத்தில் அன்பு செய்யும் தகுதி இல்லாதவன். "எப்பாரும் எப்பதமும் எங்கணும் நான் சென்றே எந்தை நினது அருட்புகழை இயம்பியிடல் வேண்டும்." இறைவனுடைய சாம்ராஜ்யத்தில் அவனுடைய அருட்புகழை விளம்பரப்படுத்தும் விளம்பர மந்திரியாகத் தாம் இருக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார். பிரபஞ்சத்தில் உள்ள எல்லா இடங்களுக்கும், ஏன், எல்லா உலகங்களுக்குமே சென்று அவன் அருளை இயம்ப வேண்டுமாம். அந்த அருளாலே ஆருயிர்கள் உய்யவேண்டுமென்பது அவர் நோக்கம். இப்படி உயிர்களிடத்தில் அன்பு வைத்து இறைவனுடைய அருளை யாசிப்பவர்களுக்கு அது எளிதில் கிட்டும். அப்படி யின்றித் தம்முடைய சகோதரனையே விரட்டி, தம் அண்டை வீட்டாரோடு விரோதித்து, பிச்சைக்கு வருகிற ஏழை எளியவர் களைக் கண்டு இரங்காமல் அடித்துத் துரத்துகிறவர்கள் எத்தனை தான் இறைவனுக்கு அபிஷேகம் செய்தாலும், பூசை செய்தாலும் அவர்களுடைய உள்ளத்தில் இறைவன் அன்பு பிறக்காது. பிறப்பதாகத் தோன்றினால் அது போலி அன்பு. அறிவும் செயலும் தாம் சொல்லும் சொற்களில் தமக்கே நம்பிக்கை இல்லாத வர்கள் பிறரை எப்படி நம்பச் செய்ய முடியும்? தாம் சொல்லும் சொற்களுக்குப் பொருள் இன்னது என்று தெரிந்து கொண்டால் போதாது. இலக்கியங்களுக்குப் பொருள் தெரிந்தால் இன்பத்தை நுகரலாம். ஆனால் வாழும் வகை இன்னது என்று சொல்லும் நூல்களுக்குப் பொருள் சொற்பொருள் மட்டுமன்று. தெரிந்து கொண்டவற்றைச் செயலாக மாற்றிக் கொள்வதுதான் அதற்கு முடிவான பொருள். சொல்லின் பொருளை மாத்திரம் தெரிந்து கொண்டு செயலாக ஆக்காமல் சோம்பேறிகளாக வாழ்கிறவர்கள் அந்த நூலைத் தெரிந்து கொண்ட முட்டாள்கள். ஆகவே யாக்கை 量了