பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 5 நிலையாதது என்றும், செல்வம் நிலையாது என்றும் நூலில் படித்து அந்த உண்மைகளுக்குப் பலபடியாக விரிவுரை சொல்வது அவர்களுடைய அறிவைக் காட்டாது. அன்பையும், அநுபவத்தை யும் காட்டாது. அவற்றை உண்மையில் உணர்ந்து கொண்டா ரானால் பிற உயிர்களுக்கு இரங்கி தம்முடைய செல்வத்தைப் பிறருக்கும் பங்கிட்டுக் கொடுக்கும் பாங்கு வரும். வாசாஞானம் பேசுகின்றவர்களுக்கு இத்தகைய செயல் இராது. இறைவன் திருவருளும் அவர்களுக்குக் கிடைக்கிறது இல்லை. கங்கைப் புராணம் இங்கே ஒரு கதை நினைவுக்கு வருகிறது. காசியில் கங்கை ஒடுகிறது. அந்தக் கங்கையில் நீராடினால் பாவங்களை எல்லாம் போக்கிக் கொள்ளலாம் என்ற நம்பிக்கை இந்த நாட்டில் பல காலமாக இருந்து வருகிறது. தம்முடைய இறுதிக் காலத்தில் காசிக்குச் சென்று அங்கே உயிர் நீத்துவிட வேண்டும் என்றும், அங்கேயே ஜலசமாதி அடைந்துவிட வேண்டும் என்றும் பல பெரியவர்கள் எண்ணி அங்கே போய் வசிக்கின்றார் கள். காசியின் மகிமையையும், கங்கையின் சிறப்பையும் பலர் விரித்துச் சொல்லியிருக்கிறார்கள். எத்தகைய பாவம் செய்தாலும் ஒரு முறை கங்கையில் நீராடினால் அது போய்விடும் என்று புராணங்கள் விரிக்கின்றன. பிரம்மஹத்தி தோஷமாக இருந் தாலும் கங்கையில் நீராடினால் போய்விடுமாம். கங்கையின் புராணத்தை அதன் கரையிலேயே பலர் படித்தும் விரித்தும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு அதில் எத்தனை நம்பிக்கையோ ஆண்டவனே அறிவான். ஒரு நாள் பார்வதியும், பரமேசுவரனும் பேசிக் கொண்டிருந் தார்கள். அப்போது பார்வதி, "இந்தப் புராணத்தில் கங்கையில் நீராடியவர்களுக்கு எல்லாப் பாவங்களும் போய்விடும் என்று சொல்லியிருக்கிறதே! இது உங்களுக்குச் சம்மதந்தானா? என்று கேட்டாள். "ஆம், அதில் சந்தேகம் என்ன?' என்றான் இறைவன். "அப்படியானால் இங்கே வந்து மூழ்குகிறவர்கள் எல்லோ ருக்கும் மோட்சத்தில் இடம் இருக்குமா?" என்று பார்வதி கேட்டாள். i8