பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீர்க்குமிழி 'கங்கையில் மூழ்குகிறவர்கள் எல்லோரும் உண்மையாகவே தம்முடைய பாவம் போகும் என்ற நம்பிக்கை உடையவர்கள் என்று நினைக்கக் கூடாது. எவன் சத்தியமாக அதை நம்பு கிறானோ அவனுக்கே பயன் உண்டு. அப்படி நம்புகிறவர்கள் மிகவும் குறைவு. இதை வேண்டுமானால் உனக்குக் காட்டு கிறேன்' என்றான் இறைவன். உடனே இறைவனும் இறைவியும் முதியவர்களாகக் கோலம் கொண்டார்கள். கங்கைக் கரைக்குச் சென்றார்கள். கிழவன் மெல்லக் கங்கையில் இறங்கி நீராட முயன்றான். அப்போது தடுக்கி விழுபவனைப் போல நடித்துக் கங்கை நீரோட்டத்தில் மிதந்தான். அம்பிகையாகிய கிழவி, "ஐயோ, ஐயோ!' என்று கத்தினாள். பலர் ஓடி வந்தார்கள். 'ஒரு பாவமும் இதுவரை செய்யாமல் இருக்கிற யாராவது ஒருவர் என்னுடைய கணவரை கரையேற்ற மாட்டாரா?' என்று கெஞ்சினாள். வந்தவர்களில் பல பேர் ஒன்றும் புரியாதவர்களைப் போலத் தயங்கினார்கள். 'யார் இதுவரையில் ஒரு பாவமும் செய்யாத வரோ அவர்தான் அவரைப் போய் எடுக்க முடியும். இல்லா விட்டால் அவர் கீழே அமிழ்ந்து விடுவார். ஒரு பாவமும் செய்யாதவராக உங்களில் யாராவது இருந்தால் உடனே போய் என் கணவரைக் கரையேற்றுங்கள் என்று புலம்பினாள் கிழவி. கங்கைப் புராணத்தைத் தினந்தோறும் படித்துக் கொண் டிருந்த அந்தணர், நாம் எத்தனையோ பாவம் செய்திருக்கிறோமே! என்று சும்மா இருந்துவிட்டார். புராணத்தைக் கேட்டுக் கொண் டிருந்தவர்களோ தாங்கள் பாவம் எதுவுமே செய்யாதவர்கள் என்று சொல்லும் தைரியம் இல்லாமல் நின்றார்கள். அங்கே இருந்தவர்கள் எல்லாருமே தங்களைப் பற்றி நம்பிக்கை இல்லா மல், 'ஒன்றுமே செய்வதற்கு இல்லையே! என்று வருத்தத்தோடு நின்றார்கள். அப்போது யாரோ ஒரு முரடன் ஓடி வந்தான். 'ஏன் அழுது கொண்டிருக்கிறீர்கள் அம்மா?’ என்று கேட்டான். "ஒரு பாவமும் செய்யாதவனாக இருந்தால் அதோ மிதக் கிறாரே என் கணவர், அவரைக் கரையேற்ற முடியும். யாராவது எனக்கு உதவி செய்ய முன்வரமாட்டார்களா?' என்று மறுபடியும் கிழவி புலம்பினாள். 19