பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 5 உடனே அந்த ஆள் கங்கையில் ஒரு முழுக்குப் போட்டான். "கங்கையில் மூழ்கினால் எல்லாப் பாவங்களும் போய்விடும். நான் மூழ்கிவிட்டேன். இப்போது ஒரு பாவமும் இல்லாதவன் நான். இதோ நான் போய் உன் கணவரைக் கரையேற்றுகிறேன். என்று சொல்லி நீந்திப் போய்க் கிழவரை இழுத்துக் கரைக்குக் கொண்டு வந்து சேர்த்தான். முதியவர்களாக வந்த இறைவனும் இறைவியும் மறைந்துவிட்டார்கள். இறைவன் அம்பிகையைப் பார்த்து, "பார்த்தாயா? கங்கை யில் ஒரு தடவை மூழ்கினால் எல்லாப் பாவமும் போகும் என்று அந்தப் பெளராணிகர் எத்தனை பேர்களுக்கு உபதேசம் செய்து வருகிறார். அவருக்கே அதில் நம்பிக்கை இல்லையே! இருந்தால் அவர் அல்லவா முதலில் வந்து என்னை இழுத்துப் போட்டிருக்க வேண்டும்? சொன்னவருக்கும் நம்பிக்கை இல்லை; கேட்டவர்களுக் கும் நம்பிக்கை இல்லை. ஆனால் ஒரு நூலையும் படிக்காமல் முரடனாக இருந்த ஒருவனுக்குத்தான் அந்த நம்பிக்கை உண்மை யாக இருந்தது. ஆகவே அவன் செய்தது பலித்தது' என்று சொன்னாராம். நம்பிக்கை "துணிந்தவர் ஈசன் துறக்கம தாள்வார்' என்பது திருமூலர் வாக்கு. தாம் உணர்ந்தவற்றைப் பிறருக்கு உரைத்தும் அதில் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு அது கொஞ்சமும் பயன் அளிக் காது. இறைவனுடைய திருவருள் இன்பத்தைப் பெறும் முயற்சி யில் மாத்திரம் அன்று; உலக இயலில் வெற்றிபெற வேண்டு மானாலும் தம்முடைய கொள்கையில் தமக்கே நம்பிக்கை இருக்க வேண்டும். அப்படி இல்லாமல் ஐயம் உள்ளவர்களுக்கு அந்தக் கொள்கை பயன் அளிப்பது இல்லை. 'சம்சய ஆத்மா விநச்யதி' என்பது கீதை. எத்தனை படித்தாலும் படித்தவர்கள் உணர்ந்து கொள்வது ஒரு பகுதிதான். உணர்ந்து கொண்டாலும் சந்தேகம் இல்லாமல் தெளிவு அடைந்து கொள்வது மிகவும் சுருங்கிய பகுதியே. அப்படித் தெளிவு கிடைப்பதிலும் அநுபவத்தில் 20