பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீர்க்குமிழி அவற்றைக் கொண்டு வருவது மிகமிகச் சிறிய பகுதியே. அது தான் உண்மையாகத் தெளிந்து கொண்டதாகும். சிறிதளவு அநுபவம்கூட இல்லாமல் கடல் போன்ற கல்வியறிவு இருந்தா லும் அத்தகையவர்களுக்குப் படித்த நூல்களால் ஒரு சிறிதும் பயன் இல்லை. அவர்கள் பேசுகின்ற ஞானத்தினாலும் பயன் இல்லை. அவர்களைவிடப் படிக்காமல் ஒரு துளியாவது அதுட வம் பெற்றவன் ஆயிரம் மடங்கு சிறந்தவன். அறிவும் அதுபவமும் விவேகானந்த சுவாமிகள் உலகத்துச் சமய நெறிகளை எல்லாம் தெரிந்து கொண்டவர். நூல்களை எல்லாம் படித்தவர். பெரிய மேதை. ஆனால் அவருக்கு அநுபவம் இல்லை. எதைக் கண்டாலும் சந்தேகமாக இருந்தது. யாராவது பரதேசியைக் கண்டால், 'நீ கடவுளைக் கண்டாயா?" என்று கேள்வி கேட்பார். அவருக்கு நூல்கள் உணர்த்தும் சமாதானங்கள் அமைதியை உண்டாக்க வில்லை. ஒவ்வொரு சந்தேகத்திற்கும் நூல் அறிந்தவன் சமாதானம் சொன்னாலும், அதற்குமேல் மற்றொரு சந்தேகத்தைக் கிளப்புகிற அறிவு அவரிடம் இருந்தது. தத்துவ நூல்களைப் படித்திருந்தாலும் மனம் அமைதி பெறவில்லை. பல நூல்களைப் படித்த வேதாந்திகளும், ஞானிகளும் எத்தனையோ பேர் இருந் தார்கள். அவர்களால் அவருக்கு ஒரு பயனும் உண்டாகவில்லை. கடைசியில் பூரீ ராமகிருஷ்ண பரமஹம்சரிடந்தான் அவர் வாய் அடங்கினார்; செயல் அடங்கினார்; உள்ளம் அடங்கினார். ராம கிருஷ்ணரோ எழுதப் படிக்கத் தெரியாதவர். என்ன ஆச்சரியம் பாருங்கள்: மகா மேதாவியாகிய விவேகானந்தர் எழுதப் படிக்கத் தெரியாத ஒருவரைக் குருவாக ஏற்றுக் கொண்டார் தம்முடைய குருவைப் பற்றி உலகம் எல்லாம் முரசு அறைந்து புகழ் பரப்பி னார் என்று சொன்னால் ஏதோ விநோதமாகத் தோன்றுகிறது. அதனூடே உண்மை இருக்கிறது. எத்தனைதான் படித்தாலும் அநுபவ உலகத்தில் ஓர் அடிகூட அது வரை எடுத்து வைக்காதவர் விவேகானந்தர். ராமகிருஷ்ண பரமஹம்சரோ அநுபவ உலகத்தில் நடனம் ஆடியவர். அவர் விவேகானந்தருக்குத் தம்முடைய பரிசத்தினாலேயே அநுபூதியை உண்டாக்கினார். அப்போது விவேகானந்தரின் வாய் அடங்கிவிட்டது. 21