பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 5 மெளனமும் ஞானமும் எங்கே மெளனம் தொடங்குகிறதோ அங்கே ஞானம் நிறைவு அடைகிறது. "மோனம் என்பது ஞான வரம்பு" என்று சொல் வார்கள். வாய் பேசுகின்ற போது அதனை அநுபூதி நிலை என்று சொல்ல முடியாது. அநுபூதி பெற்றவர்கள் மெளனமாக இருந்து, பிறகு உலகம் உய்ய வேண்டுமென்று சிலவற்றைச் சொல்வார்கள். சொல்வது ஒரு மடங்கு, செய்வது பத்து மடங்காக இருக்க வேண்டும் என்று அரசியல் தலைவர்கள்கூட இப்போது சொல் கிறார்கள். நாட்டில் வளம் நிரம்பவேண்டுமானால் உழைப்பு வேண்டும், உரை அடங்கவேண்டுமென்று பலர் பேசுகிறார்கள். உலக இயலோடு தொடர்புடைய வளவாழ்வுக்கே இந்த நீதி வேண்டுமானால் இறைவனுடன் தொடர்புடைய இன்ப வாழ் வுக்கு இது எத்தனை அவசியம் என்பது சொல்லாமல் விளங்கும். உயிர்க் கூட்டத்தினிடம் உண்மையான அன்பு வைப்பவர்களே இறைவனிடத்தில் அன்பு பாலித்தவர்கள் ஆவார்கள்; அப்படி அல்லாமல் பலபல பேசியும், பிறருக்கு உபதேசம் செய்தும் வாழ்கிறவர்கள் இறைவன் அன்பை உணராதவர்கள். ஆத்ம குணம் ஆருயிர்களிடத்தில் அன்பு வைப்பது ஆத்ம குணங்களுக்குள் ஒன்று. ஆத்ம குணம் இல்லாமல் பக்தி வராது. இறைவனிடத் தில் உண்மையான அன்பு பூண்டவர்களுக்கு இயற்கையாகவே ஆத்ம குணங்கள் நிரம்பி வரும். பிறருடைய துயரத்தைக் கண்டு இரங்கும் உள்ளம் இருக்கும். பசித்தவர்களுக்குக் கிடைப்பதைக் கொடுப்பதும், கொடுக்க முடியாத நிலையில், "ஐயோ இப்படிக் கொடுக்க முடியாமல் இருக்கிறேனே!' என்று இரங்குவதும் அவர்களுடைய இயற்கையாக இருக்கும். அப்படியின்றித் தமக்கு வயிறு நிறையத் தின்பதற்குச் சோறு கேட்கிறவர்கள், உடம்பு நிலையாதது என்றும், செல்வம் நிலை யாதது என்றும் பேசிவிட்டு, 'ஐயா பசி', என்று யாரேனும் வந்தால் எங்காவது போய்விடுவார்களேயானால் அவர்களைப் போல அஞ்ஞானி வேறு ஒருவனும் இல்லை. ஞானமாகிய வேலை ஏந்திய குமரனிடத்தில் அவர்களுக்கு எள்ளளவும் அன்பு 22