பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 5 வீடு என்று சொல்கிற வழக்கம் திருமுருகாற்றுப்படைக்கு பின்னர்; தான் எழுந்தது. படைவீடு என்பது அரசன் சென்று படைகளோடு தங்கியிருக்கும் இடம். முருகப் பெருமான் தன்னுடைய அடியார் களுக்கு அருள் செய்வதற்காக இந்த ஆறு இடங்களிலும் தன் னுடைய கணங்களுடன் தங்கியிருக்கிறான். ஆதலால் அவை படைவீடு என்று பெயரைப் பெற்றன. திருஆவினன்குடியை மூன்றாவது படைவீடாக நக்கீரர் சொல்கிறார். ஆவினன்குடியே பழனி என்றாலும், சிலர் அடி வாரத்தில் இருக்கிற கோயிலை ஆவினன்குடி என்றும், மலைக்கு மேல் இருக்கிற கோயிலைப் பழனி என்றும் சொல்கிறார்கள் 'ஆவினன்குடிதான் பழையது; பழனி என்ற தலம் பழையது அன்று' என்றும் சிலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். மலையின்மேலே கோயில் இருந்தால் கீழும் கோயில் இருப்பது வழக்கம். திருச்செங்கோட்டில் அப்படி இருப்பதைக் காணலாம். பழனி மலையின்மேல் தண்டாயுதபாணி எழுந்தருளியிருக்கிறான். மலையின் கீழே முருகன் எழுந்தருளியிருக்கிறான். மலையின் மேல் ஏறி வழிபட இயலாதவர்களுக்கு கீழும் இறைவன் எழுந் தருளிக் காட்சி தருகிறான். பழனி என்ற மலை யும் பழமை யானது; அதிலுள்ள முருகனும் பழமையானவன். ஆவினன்குடி என்பது அந்த ஊருக்குப் பெயர். பழனி என்பது மலைக்குப் பெயர். பழங்காலத்தில் ஆவியர் குலம் என்ற குலத்தில் பிறந்த குறுநில மன்னர்கள் இந்த இடத்தைத் தலை நகராகக் கொண்டு ஆண்டு வந்தார்கள். ஆவியினுடைய நல்ல குடி ஆதலின் ஆவிநன்குடி என்று ஆயிற்று. அவர்கள் வைகின இடத்திற்கு வைகாவிபுரி என்றும் பெயர் உண்டு. அதுவே நாளடை வில் வையாபுரி என்று ஆயிற்று. பழனிக்கே வையாபுரி என்று பெயர் உண்டு. இப்போது ஒரு குளத்திற்கு பெயராக வழங்குகிறது. ஆவியர்கள் காலத்தில் தோன்றிய மன்னர்களில் சிறந்தவன் பேகன் என்பவன். அவனை வையாவிக்கோப்பெரும்பேகன் என்று சங்கநூல் கூறும். குளிரால் நடுங்கின மயிலுக்கு அவன் போர்வை தந்தான் என்று ஒருவரலாறு உண்டு. ஏழு வள்ளல் களில் ஒருவன் அவன். மலையின்மேல் இருக்கிற ஆண்டவனை வழிபடும் வழக்கம் அவனுக்கும் அவனது மரபினருக்கும் இருந்து வந்தது. ஒருநாள் எங்கேயோ சென்று கொண்டிருந்த 254,