பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிறருக்கு இடுதல் என்பதை மிகச் சிறந்த தர்மமாக இந்த நாட்டில் கடைப்பிடித்திருக்கிறார்கள். ஒர் அரசன், நான் இந்தக் தாரியத்தைச் செய்யாமற் போனால் இன்ன இன்ன பாவத்தைச் செய்தவனாவேன்' என்று சபதம் செய்கிறான். 'பலநாள் விருந் ஒனர் வாராமல் இருக்கிற அபாக்கியத்தை நான் பெறுவேனாக' என்று அங்கே சொல்கிறான். "இரவலர் வாரா வைகல் பலவா குகயான் செலவுறு தகவே." அதனால், கொடாமல் இருக்கிற நிலை எவ்வளவு கொடியது என்பதை உணர்ந்து கொள்ளலாம். அழுதல் இனி அடுத்தபடியாகச் சொல்கிறார். பரமானந்தம் மேற்கொள விம்மி விம்மி நடிக்கின்றிலை. இறைவனுடைய திருவருளினால் கிடைக்கும் ஆனந்தந்தான் மேலான ஆனந்தம். அதற்கு முன்னாலே வருகிற சிலசில மகிழ்ச்சி கள் மேலே உள்ள கோயிலுக்குப் படிகள் போன்றவை. ஆனந்தம் வந்துவிட்டால் நாணம் இல்லாமல் குதிப்பான்; அழுவான்; ஆடுவான்; பாடுவான். யாருக்கு ஆனந்தம் உண்டாகிறதோ அவன் அழுவான். அது துக்கத்தினால் அழுவது அல்ல; ஆனந்தத்திலே விம்முவது. நாமும் அழுகிறோம். எல்லா அழுகையும் ஆனந்தத்தினால் வந்தன என்று சொல்ல முடியாது. ஒர் ஊரில் ஒரு தெருவில் இரண்டு பெரும் செல்வர்கள் வீட்டில் அழுகை கேட்கிறது. வீதியின் ஒவ்வொரு கோடியிலும் அவர்களுடைய வீடு இருக்கிறது. இரண்டு குடும்பத்தாரும் லட்சாதிபதிகள். ஒரு கோடியில் உள்ள வீட்டுப் பெண்மணி இடுப்புவலி என்று அழுகிறாள். மற்றொரு வீட்டுப் பெண்மணியும் அப்படியே அழுகிறாள். இரண்டு வீட்டி லும் பக்கத்தில் பலர் இருக்கிறார்கள். ஒரு வீட்டில், அருகில் இருப்பவர்கள் எல்லாம் மகிழ்ச்சியோடு இருக்கிறார்கள். மற்றொரு வீட்டிலோ வேதனையோடு இருக்கிறார்கள். சிறிது நேரம் கழித்து ஒரு வீட்டில் அழுத அம்மாள் அழுகையை நிறுத்துகிறாள். ஆனால் வேறு ஓர் அழுகை கேட்கிறது. அது சிறிய குழந்தையின் அழுகை; அப்போது பிறந்த குழந்தை. க.சொ.V-18 263