பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 5 'துரும்பாக இளைத்து விட்டாயே' என்று ஒருவரைப் பார்த்துச் சொல்கிறோம். உண்மையில் துரும்பு போல எப்படி இளைக்க முடியும்? அப்படிச் சொல்லும்போது பொய் சொல் கிறோம் என்ற நினைவு இல்லை; கேட்கிறவனுக்கும் இல்லை. மிகையாகச் சொல்வதாக, அலங்காரமாகச் சொல்வதாக நினைத்துத் கொள்கிறோம். இப்படியே குழந்தையைப் பார்த்து, 'யானைக் குட்டி" என்கிறோம். யானைக்குட்டி போலக் கொழு கொழு என்று இருக்கிறதென்று பொருள். இவையெல்லாம் மேலாகப் பார்த்தால் பொய்யாகத் தோன்றும். ஆனால் பொய் அன்று; அலங்காரப் பேச்சு. அதுபோல அருணகிரியார் இந்தப் பாட்டில் சொல்வது ஒரு வகையான அலங்காரந்தான்; நூலே அலங்காரந் தானே? - அருணகிரியார் இயல்பு அருணகிரிநாத சுவாமிகள், "நான் அதைச் செய்யவில்லையே! இதைச் செய்யவில்லையே! இந்தக் குற்றத்தைச் செய்தேனே! அந்தக் குற்றத்தை செய்தேனே' என்று புலம்புவன எல்லாம். தம்மை நினைந்து சொல்வன அல்ல என்பதைப் பலமுறை பார்த்து வருகிறோம். இந்தப் பாட்டை, தம்முடைய உறுப்பு களை ஆண்டவனுடைய வழிபாட்டில் ஈடுபடுத்தாமல் இருக்கிற வர்களை நினைந்து சொல்வதாகக் கொள்ளவேண்டும். "நீங்கள் இப்படி இருக்கிறீர்களே என்று நம்மைப் பார்த்துச் சொன்னால் நமக்குக் கோபம் உண்டாகும். பெரியவர்களைப் புகழ்ந்தால் அவர்கள் நானுவார்கள்; அவர்களுடைய குற்றத்தை எடுத்துச் சொன்னால் சொன்னவரைப் போற்றித் தாம் வாடுவார்கள். பொல்லாதவர்களிடத்தில் அவர்களுடைய குற்றத்தை எடுத்துச் சொன்னால் கோபம் கொள்வார்கள்; சொன்னவருக்குத் தீங்கு செய்தாலும் செய்வார்கள். குரங்குக்கு உபதேசம் செய்த குருவி பட்ட பாடு நமக்குத் தெரியுமே பொல்லாதவர்களுக்கு உபதேசம் செய்யப் புகுந்தால், 'நீ யார் உபதேசம் பண்ண?' என்று கேட் பார்கள். இது அருணகிரிநாதப் பெருமானுக்குத் தெரியாதா? தாய் போன்ற கருணையையுடைய அவர், நாம் இருக்கும் நிலைமையை உணர்ந்து தாமே அப்படி இருப்பதாக இரங்குகிறார். 272