பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மயக்கத்துக்கு முறிவு காமினி காஞ்சனம் இராமகிருஷ்ண பரமஹம்சர் அடிக்கடி, காமினி காஞ்சனத் தினாலேயே இறைவனது திருவருள் நம்மைச் சார முடியாது இருக்கிறது என்று வற்புறுத்திச் சொல்வார். அவர் பத்தொன்ப தாவது நூற்றாண்டில் வாழ்ந்தவர். மக்கள் மாதர் மயலினாலும், பணத்தாசையினாலும் உயர்ந்த கொள்கைகளைப் பறி கொடுத்து விட்டுத் தீய ஒழுக்கத்தைச் சார்ந்து மயங்குகிறார்கள். எல்லர் வகையான இன்பங்களும் பொருளினால் வரும் என்று, எந்தப் பருவத்தினரானாலும் அதற்காக ஏங்கி நிற்கிறார்கள். உடம்பில் பலமும், அறிவில் கிளர்ச்சியும், முயற்சி செய்யும் ஊக்கமும் உடையவர்கள்கூடப் பெண் மயலில் சிக்கி வாழ்நாளைச் சோர விடுகிறார்கள். ஆண்டவன் மனிதனைக் கரசரணாதி அவயவங் களைக் கொண்டு நல்ல கதி அடைய வேண்டுமென்பதற்காகப் படைத்திருக்கிறான். இறைவன் தந்த கருவிகளைப் பணத்தைச் சம்பாதிப்பதிலும், பெண் போகத்தை அடைவதிலுமே செல வழித்து விட்டு, வாழ்நாளை வீணாக்குகின்ற மக்களைப் பார்த்து இறைவன் திருவருளைப் பெற்ற பெருமக்கள் இரங்குவது இயல்பு. அருணகிரியார் காலநிலை அருணகிரி முனிவர் காமத்தினால் வருகின்ற துன்பங்களை நன்றாக உணர்ந்தவர். அவர் காலத்தில் பலர் சிற்றரசர்களாக வாழ்ந்தார்கள். ஜமீன்தார்கள் என்று பிற்காலத்தில் நாம் சொல் கின்றவர்களைப் போலவே அவர்கள் வாழ்ந்தார்கள். பணம் வந்துவிட்டால் பலபல போகங்களையும் அநுபவிக்க வேண்டுமென்று அறிவுத் தெளிவு இல்லாதவர்களுக்குத் தோன்றும். போகங்களுக்குள்ளேயே மிகவும் உயர்ந்தது பெண் போகம் என்று அவர்கள் நினைக்கிறார்கள். இன்றும் பணத்தைச் சம்பாதிக்