பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 5 ஈடுபட்டிருப்பதைப் பார்த்தால் அவருடைய நிலையே வேறாக இருக்கும். மாளிகையில் அவரது வாழ்வைப் பாராத ஒருவன் நோயாளிகளுக்கு நடுவில் அவரைப் பார்த்தால் அவர் நிலைக்கு வருந்தி இரங்குவான். அருணகிரி முனிவர் ஆண்டவன் திருவருள் இன்பத்தைப் பெறுகிற வாழ்வில், ஆண்டவனது இன்ப மாளிகையில் வாழ் கின்ற நிலையிலேயே இராமல், உலகமாகிய ஆஸ்பத்திரியில் நடமாடுகின்ற நோயாளிகளுக்கு நலம் செய்ய வருகிறார். தம் முடைய சொல் மருந்தினால் சுகம் அடையும்படி செய்ய வேண்டு மென்ற கருணையினால் இரங்கி இந்த நிலையில் இருக்கிறார். அவர்களிடத்தில் வந்து அவர்களுடைய நோயைத் தம்முடைய நோயாக ஏற்றுக் கொண்டு பல பாடல்களைப் பாடியிருக்கிறார். மனிதர்களுடைய குற்றங்கள் பலவகையாக இருந்தாலும் எல்லாவற்றுக்கும் மேலாகப் பலபல துன்பங்களுக்குக் காரண மாக இருப்பது காமம். அதனால் அதைப் பற்றி அடிக்கடி சொல் வது அருணகிரியாருடைய இயல்பு. இந்தப் பாடலில் காமத்தி னால் உண்டாகும் தீமையைச் சொல்ல வருகிறார். தாமே காமத் தினால் துன்புறுவது போல வைத்து, அதை மாற்றிக் கொள்ள வேண்டுமென்று தம் நெஞ்சைப் பார்த்து உபதேசம் செய்வது போல இந்தப் பாட்டை அமைக்கிறார். மகளிர் அலங்காரம் நம்முடைய நாட்டில் பெண்டிர் தம்மை அளவுக்கு மீறி அலங்காரம் செய்து கொள்வதில்லை. அப்படிச் செய்து கொண் டால் வீட்டுக்குள்ளே இருந்து தம் கணவன்மார்களின் கண்ணில் படுவதற்காக மாத்திரம் செய்து கொள்வார்கள். தாம் செய்து கொள்ளும் அலங்காரத்தைப் பிறர் காணவேண்டுமென்றும், தம் அழகைப் பிறர் புகழவேண்டுமென்றும் நினைப்பது இந்த நாட்டுப் பண்புக்கு நேர் விரோதமானது. மேல் நாட்டிலோ பிறர் காண அலங்காரம் செய்து கொள்வது இயல்பு. ஒருவருடைய மனைவியை அவருடைய முன்னிலையில் பிறன் ஒருவன், 'சிறந்த அழகி" என்று புகழ்ந்தால் அவர்களுக்கு மிகவும் உவகை உண்டாகும். அப்படிப் புகழ்வது நாகரிகமுங்கூட. ஆனால் இந்த நாட்டிலோ கணவன்கூடத் தன் மனைவியை வெளிப்படையாகப் புகழ்வது இல்லை. 286