பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/331

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 5 இன்பம் நடத்தும்படி செய்கிறான். அந்த நிலையில் அவன் அணிவது கடம்ப மலர்மாலை. வள்ளியை மணந்த இடம் திருத்தணிகையில் முருகன் வள்ளி யெம்பெருமாட்டியை மணந்து கொண்டான். தன்னை எதிர்த்து வந்த வேடர்களைச் சினத்தினால் பொருது, வள்ளி நாயகியின் வேண்டுகோளால் கோபம் தணிந்து, திருத்தணிகைக் குகையில் வந்து தங்கி வள்ளி யோடு இன்புற்றான். அவன் கோபம் தணிந்த இடம் ஆதலால் தணிகை என்ற பெயர் வந்தது. அதுவே தணி என்றும் வழங்கும். கோபம் தணிந்து, போக மூர்த்தியாக முருகன் எழுந்தருளியிருக்கும் இடம் இது. ஆதலின் அவன் அணிவதற்குரிய மாலைக்கு வேண்டிய கடம்ப மலர்கள் இங்கே நிறையக் கிடைக்கின்றன. அருண கிரியார் சென்று தரிசித்த காலத்தில் இங்கே நிறையக் கடம்ப மரங்களை வளர்த்து வந்தார்கள் போலும். நாள்தோறும் முருகனுக்குப் பெரிய பெரிய கடம்பமாலைகளை அணிய ஏற்ற வகையில் எங்கே பார்த்தாலும் கடம்ப மரங்கள் நிற்கின்றன. மரம் இருந்தால் போதுமா? அவ்வளவும் கொத்துக் கொத்தாக மலர்களைத் தாங்கி அழகுடன் விளங்குகின்றன. வள்ளி மணவாளனது கல்யாண மண்டபம் திருத்தணிகைக் குன்று; அதனைச் சூழ அலங்காரம் செய்த பசுந்துண்கள் அந்தக் கடம்ப மரங்கள் என்று சொல்லும்படியாக அவை நிற்கின்றன. கொந்தார் கடம்பு புடைசூழ் திருத்தணிகைக் குன்றில் நிற்கும், கந்தா! கொந்து - பூங்கொத்து. கந்தன் என்பதன் பொருளைப் பலமுறை நாம் சிந்தித்து வந்திருக்கிறோம். இணைக்கப்பட்டவன், மூலமாக இருப்பவன் என்று பல பொருள் அத்திருநாமத்துக்கு உண்டு. இளங்குமரன் முருகன் இளங்குமரனாக இங்கே இருக்கிறானாம். அவன் என்றும் இளைய குமரன்தான். ஆயினும் வள்ளி நாயகியை வசப் 324