பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/333

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 5 முருகன் ஆற்றல் அவன் ஆற்றலிற் பெரியவன்; வீரத்திற் சிறந்தவன். அவ னுடைய வீரச் சிறப்பை அறிந்து கொள்ள வேண்டுமானால் அமராவதிப் பட்டணத்துக்குப் போய்க் கேட்க வேண்டும். தேவர் கள் வாழும் உலகத்தில் இந்திரன் எல்லா வகைப் போகங்களும் பெற்று வாழும் இராசதானி அமராவதி. அங்கே சென்று, 'இந்த ஊருக்குச் சொந்தக்காரன் யார்?' என்று கேட்டால், "இந்திரன்' என்று சொல்வார்கள். 'அவன்தான் இந்த நகரத்தைப் பாதுகாக் கிறானோ?” என்று கேட்டுப் பாருங்கள். உண்மை வெளிவரும். 'அமராவதியில் கிடைக்கும் இன்பங்களை நுகர்ந்து வாழ்பவர் கள் தேவர்களாகிய நாங்கள். எங்களுக்குத் தலைவன், மன்னன் இந்திரன். எந்தவிதமான இடுக்கணும் இல்லாதவரையில் இது இந்திரனுக்குரிய பட்டணந்தான். ஆனால் இதைப் பாதுகாக்கும் திறமை எங்களுக்கு இல்லை. முருகன்தான் அமராவதியைக் காக்கிறான்; தேவலோகத்துக்குத் துன்பம் வராமல் பாதுகாக் கிறான்; எங்கள் வாழ்வு குலையாமல் காவல் புரிகிறான். இந்திரன் அமராவதிக்கு அரசன், அரசனே காவலனாக இருப்பது உலகத்து வழக்கு. இங்கே அப்படியில்லை. அமராவதியில் இன்பம் பெற்று வாழும் மன்னன் இந்திரன்; இதற்கு இடையூறு வராமல் காப்பாற் றும் காவலன் முருகன்' என்று தேவர்கள் சொல்வார்கள். ஒரு சமயம் இந்த உண்மையை அவர்கள் மறந்திருந்தார்கள். இறைவன் அவர்களுக்கு அவர்களுடைய ஆற்றலின் எல்லையைப் புலப்படுத்தி அகந்தையைப் போக்க எண்ணிச் சூரனைப் படைத்து விட்டான். அவன் அமரலோகத்தையே சூறையிட்டான். அவனை எதிர்த்துப் போரிட மாட்டாமல் தேவர்கள் சிவபிரானிடம் முறை யிட்டுக் கொண்டார்கள். முருகன் திருவவதாரம் செய்து சூரனை அழித்தான். சூரனோடு போர் செய்யும்போது ஒரு பக்கம் தேவர்களும் மற்றொரு பக்கம் அசுரர்களும் நின்று பொருதனர். அசுரர்களுக்குத் தலைவனாகச் சூரபன்மன் நின்றான். தேவர்களுக்குத் தலைவனாக இந்திரன் இருக்க வேண்டும் அல்லவா? அப்படி இல்லை. முருகனே தேவர் படைக்குத் தலைவனாக, தேவ சேனாதிபதியாக நின்று பொருதான். 326