பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/353

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 5 தாராகணம் எனும் தாய்மார் அறுவர் தரும்முலைப்பால் ஆராது உமைமுலைப்பால் உண்ட பாலன். “முருகனாகிய குழந்தையின் துணை எனக்கு இருக்கிறது. அவன் யார் தெரியுமா? பூவுலகையும், தேவருலகையும் காப்பாற்று வதற்காகச் சிவபெருமானிடமிருந்து தோன்றிய குழந்தை. ஆறு பேரோடு ஏழாவது அன்னையிடம் பால் குடித்தவன்' என்கிறார். சிவபெருமானுடைய ஆறு முகங்களிலிருந்து ஆறு பொறி களாக எழுந்து சரவணப்பூம் பொய்கையிலே ஆறு குழந்தைகளாக வளர்ந்தான். உமாதேவியின் குழந்தையாக இருந்தாலும் தனக்குப் பால் கொடுக்கும் புண்ணியம் வேறு சிலருக்கும் கிடைக்க வேண்டுமென்று அவன் திருவுள்ளம் கொண்டான். தாராகணம் எனும் தாய்மார் அறுவர். தாராகணம் - நட்சத்திரங்களின் கூட்டம். ஆறு நட்சத்திரங்கள் சேர்ந்த கூட்டத்தைக் கிருத்திகா நட்சத்திரம் என்று சொல்வார்கள். அந்த ஆறு நட்சத்திரங்களும் ஆறு மாதர்கள். ஏழு முனிவர்களுக்குள் வசிஷ்டர் அல்லாத மற்ற முனிவர்களுடைய கற்புடைய மனைவி களாகிய ஆறு பேர் இப்போது கிருத்திகா நட்சத்திரங்களாக இருக் கிறார்கள் என்று சொல்வார்கள். குழந்தையாகிய ஆறுமுகநாத னுக்குப் பாலூட்டி வளர்க்க வேண்டுமென்று தவம் செய்தவர்கள் அவர்கள். அவர்கள் முனிவர்களுடைய பத்தினிகளாக இருந்து பல நல்ல காரியங்களைச் செய்து அதன் பயனாக இப்போது வானில் நட்சத்திரமான ஒளிர்கிறார்கள். அந்த ஆறு பேரும் சரவணப்பூம் பொய்கையில் ஆறு குழந்தைகளின் உருவத்தில் இருந்த முருகப் பெருமானுக்குப் பால் ஊட்டினார்கள். பின்பு எம்பெருமாட்டியிடம் ஞானப் பாலை உண்ண வேண்டும் என்று திருவுள்ளத்தில் நினைத்தான் முருகன். ஞானமே திரு வுருவமாகிய எம்பெருமானுக்கு இறைவியினுடைய பாலை உண்ட பிறகே அருள் விளக்கம் உண்டாகும். அதுவரைக்கும் சரவணப்பூம் பொய்கையில் குழந்தையாக இருக்கும் நிலை மாத்திரம் இருந்தது. ஞானக் கனலாக விளங்கும் சிவபெரு மானிடத்தில் இருந்து ஞானப் பொறிகளாக வந்த பெருமானுக்கு அருள் ஊட்டம் இருந்தால்தான் உலகம் எல்லாம் அந்தக் குழந்தையினால் பயன் பெறும். ஆதலின் உமா தேவியினுடைய 346