பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 5 தனி வழிபாடு உடம்பின் நலத்தைக் குறித்து ஒவ்வொருவரும் தனித் தனியே உண்ணுவது அவசியமானால் உள்ளத்திற்கு உணவாக இறைவனுடைய திருவுருவத்தைத் தனித்திருந்து வழிபடுவதும் தியானித்தலும் மிகவும் அவசியம். பொதுவாக ஆலயத்தில் சென்று இறைவனுடைய திருவுருவத்தைக் கண்டு வழிபடலாம். அதற்கு மேலும் முயற்சி செய்யாவிட்டால் அந்தத் திருவுருவம் உள்ளத்தில் பதியாது. காவிரிக்குப் போய்க் குடத்தில் தண்ணீர் எடுத்துக் கொண்டு வருகிற தாய் அப்படியே கொண்டு வந்து வைத்துவிடுவது இல்லை. அதைச் சிறிய பாத்திரங்களில் மொண்டு எடுத்து வேண்டிய காரியங்களுக்குப் பயன்படுத்திக் கொள்கிறாள். அதைப் போலவே ஆலயத்திற்குச் சென்று மனத்தைத் தூய்மை யாக்க இறைவனுடைய திருவுருவத்தைக் கண்ணால் கண்டு கருத்திலும் பதிய வைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்து தனியே இருந்து தியானம் செய்ய வேண்டும். தரிசனம் செய்வது கூட்டத் தில் இருந்தாலும் தியானம், பூசை செய்வது தனியாகத்தான் இருக்க வேண்டும். தியானமும், பூசையும் ஒவ்வொரு மனிதனுக் கும் தனித்தனி நிலையில் அமைவன. இப்படித் தனியாக இருந்து பூசை செய்வதும், தியானம் செய் வதும் ஆகிய காரியங்களைப் பாரத நாட்டில் உள்ள சமயங்களே வற்புறுத்திச் சொல்கின்றன. தனியாக ஒருவன் பூசை செய்ய வேண்டியதன் அவசியத்தை நம்முடைய நாட்டுச் சமயத்தார் எல்லோரும் வற்புறுத்துகிறார்கள். இதற்காகத் தீட்சை செய்து கொள்கிறார்கள். நமக்கு வழிகாட்ட வந்த ஆசார்யர்களும் நாம் தனித்திருந்து பூசை செய்ய வேண்டும் என்பதை வற்புறுத்து வதற்காகத் தனியாகப் பூசை செய்து காட்டுகிறார்கள். கோயிலில் உள்ள விக்கிரகத்தை நாம் பூசை செய்ய முடியாது. அதற்கு உரிமை முப்பொழுதும் திருமேனி தீண்டுவார் ஆகிய ஆதி சைவர்களுக்குத்தான் உண்டு. ஆனால் ஒவ்வொரு வரும் நினைத்தால் தனித் தனியே பூசை செய்ய முடியும். நம்முடைய வீட்டைக் கோயிலாக்கி, அங்கே விக்கிரகத்தை அமைத்துப் பெரியவர்களிடம் உபதேசம் பெற்று நன்றாகப் பூசை செய்யலாம். எல்லோருமே உணவுச் சாலையில் சாப்பிட வேண்டு 30