பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 5 வணக்கம் புரியலாம். இப்படிச் செய்வது அடுத்தபடிக்குப் போவ தற்கு உபயோகமாக இருக்கும். இத்தகைய பழக்க வழக்கங்களை இந்த நாட்டுப் பெரியவர்கள் நமக்குச் சொல்லித் தந்திருக் கிறார்கள். இறைவனுக்கு வடிவமும், திருநாமமும் வகுத்து அவற்றை எந்த நிலையில் இருப்பவர்களும் பயன்படுத்திக் கொள்ளும்படியாக மிக எளியமுறையை வகுத்திருக்கிறார்கள். இத்தகைய முறை வேறு நாட்டில் கிடைப்பது இல்லை. நம்முடைய உள்ளத்திற்கு ஏற்ற வழிபடு தெய்வத்தைத் தனியே நிறுவி அதற்குரிய யந்திர மந்திரங்களைத் தெரிந்து கொண்டு முறைப்படி வழிபடுவதில் பேரநுபவம் அடைந்த பல மகான்கள் இந்த நாட்டில் இருந்தார்கள். இப்போதும் இருக்கிறார்கள். அவர்கள் பிறக்கும்போது மகான்களாகப் பிறப்பதில்லை. பிறந்த பிறகு தம்முடைய மனம், வாக்கு, காயம் ஆகிய எல்லாவற்றை யும் இறைவனுடைய பூசை, தியானம் முதலியவற்றில் செலுத்தி முறுகிய தியானத்தால் பெரியவர்களாகியிருக்கிறார்கள். அந்த நிலை யாருக்கும் கிடைக்கும். வேதம் ஒதுபவர்களால் மாத்திரந் தான் அதைப் பெறமுடியும் என்ற வரையறை இல்லை. தில்லை வாழ் அந்தணர்கள் அறுபத்துமூன்று நாயன்மார்களில் முதலில் சொல்லப்படுகிறார்கள். ஆனால் அதே நாயன்மார் கூட்டத்தில் அந்தக் காலத்தில் தீண்டாத சாதியில் பிறந்த திருநாளைப் போவாரும் இருக்கிறார். அவருடைய பக்தியையும் ஆண்டவன் ஏற்றுக் கொண்டான். இன்று அந்தப் பெருமான் நாம் வழிபடும் தெய்வக் கூட்டங்களில் ஒருவராக இருக்கிறார். அப்படியே அந்தணர் குலத்தில் பிறந்தவராகிய பெரியாழ்வாரும் போற்றுகின்ற நிலை பெற்றார்; பாணர் குலத்தில் பிறந்த திருப்பாணாழ்வாரும் போற்றப் பெறுகிறார். பாணர் குலம் அந்தக் காலத்தில் இழிந்த குலமாக நினைக்கப்பட்டது. அப்படி இருந்தும் அவரும் இறைவன் திருவருளைப் பெற்று உய்ந்தார். இவற்றால், தனிமனிதர்கள் தம்முடைய முயற்சியினால் இறைவனை வழிபட்டுப் பூசை செய்து பெறுதற்கரிய பேற்றைப் பெறலாம் என்பதும், அதற்கு ஏற்ற வசதிகள் எல்லாம் இந்த நாட்டில் இருக்கின்றன என்பதும், அந்த நம்பிக்கையை ஊட்டுகின்ற பழக்க வழக்கங்கள் இந்த நாடு முழுவதும் இருக்கின்றன என்பதும் புலனாகின்றன. ஆகவே, பெறுதற்கரிய பிறவியைப் பெற்றும் என்று அருண கிரியார் சொல்லும்போது அவர், 'வாயும், அறிவும், கையும், 32