பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 5 முன் பிறவியில் சிலந்தியாக இருந்து வழிபட்ட பெருமை யினால் கோச்செங்கட் சோழனாகப் பிறந்து உலகத்தை ஆண்டு சிறந்திருந்தான் என்ற இந்தக் கதையை ஆராய்ச்சிக் கண் கொண்டு பார்ப்பதில் பயன் இல்லை. அந்தக் கதையின் கருத்து, அறிவற்ற பிராணியும் இறைவனை வழிபட்டால் நல்ல பயன் பெறும் என்பதே. சிலந்தி பூசை பண்ணின மற்றொரு தலம் உண்டு. அது காள ஹஸ்தி. கழுதையும் பூசை பண்ணின இடம் உண்டு. திருக்கர புரத்தில் கழுதை வழிபட்டு நலம் பெற்றது. யானை பூசை பண்ணின இடம் திருவானைக்கா மட்டும் அல்ல; திருக்காளத்தி யிலும் பூசைபண்ணியது. பாம்பு பலவிடங்களில் பூசைபண்ணிப் பேறு பெற்றதாகக் கதை உண்டு. இப்படிக் குரங்கு வழிபட்ட இடம், பசு வழிபட்ட தலம், வண்டு வழிபட்ட தலம், மான் வழிபட்ட தலம் என்று பல தலங்கள் உண்டு; தலபுராணங்களைப் பார்த்தால் தெரியவரும். அவற்றையெல்லாம் பார்க்கும்போது அவைகளே பூசை பண்ணிப் பேறு பெற்றிருக்கின்றனவே; பெறுதற்கு மிகவும் அரிய பிறவி யாகிய மனிதப் பிறவியை எடுத்திருக்கும் நாம் சும்மா இருக்க லாமா?' என்ற இரக்கம் நமக்குத் தோன்ற வேண்டும். இது தான் புராணங்களைப் படிப்பதன் பயன். விலங்குகளின் அறிவு பறவை முதலியவை பூசை பண்ணுமா என்று ஒருவர் கேட்டார். "ஞான சம்பந்தர் முதலிய பெரியவர்கள் சொல்லியிருக் கிறார்களே!' என்று நான் சொன்னேன். 'அவர்கள் ஏதாவது காரணத்தைக் கொண்டு சொல்லியிருக்கலாம். அதற்கு வேறு ஏதாவது பொருள் இருக்கலாம். வண்டு நேராகப் பூசை பண்ணி யது என்று என்னால் நம்பமுடியவில்லை' என்று அந்த அன்பர் சொன்னார். வண்டு பக்தியுடன் பூசை பண்ணிற்றா இல்லையா என்பதைத் தெரிவதற்குமுன், அதற்கு உள்ளம் உண்டா இல்லையா என்ற ஆராய்ச்சி செய்ய வேண்டும். பிறருடைய உள்ளத்தில் இருப்பதை அறிந்து கொள்ள நமக்கு ஆற்றல் இல்லாதபோது மற்றப் பிராணிகளின் உள்ளத்தைப் பற்றி ஆராய நமக்குச் சக்தி 36