பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெறுதற்கரிய பிறவி நான்கு முகம் படைத்த பிரமதேவன் ஒரு தவறு செய்த தனால் அவனை முருகன் சிறையில் அடைத்துவிட்டான். படைப் பாகிய தொழில் நின்றுவிட்டது. அதன் பின் நடக்கவேண்டிய காப்பு முதலிய காரியங்களும் நிகழவில்லை. ஆகையால் தேவர்கள் யாவருக்கும் வேலை இல்லாமல் போய்விட்டது. சுத்த சோம்பேறியாகப் பொழுது கழித்தால் நல்லவர்களுக்கு நோய் வந்ததுபோல இருக்கும். ஆகையால் தங்களுக்கு வேலையும் அதன் காரணமாக அவிசு முதலிய கூலியும் கிடைக்காமையினால் தேவர்கள் ஆராய்ந்தார்கள். மூலத் தொழிலாகிய படைப்பு நின்று விட்டதே இந்த நிலைக்குக் காரணம் என்பதை உணர்ந்தார்கள். அதற்குக் காரணம் நான்முகன் முருகப்பெருமானுக்கு அபசாரம் செய்தது என்பதைத் தெரிந்து கொண்டார்கள். அதற்குமேல் எல்லாரும் பழனி ஆண்டவனிடம் போய், நான்முகனை மன்னித்து விடுவிக்க வேண்டுமென்று வேண்டிக் கொள்ள வந்தார்கள். வரும்போது பூவுலகத்தில் முருகப் பெருமானிடத்தில் அன்பு செய்யும் முனிவர்களையே முன்னிட்டுக்கொண்டு வந்தார்களாம். முருகப் பெருமானுக்குக் கோபம் உண்டாகாதிருக்க வேண்டு மென்று அவனுடைய குழந்தைகளைப் போன்ற முனிவர்களை முன்னால் போகச் சொல்லி, பின்பு அவர்களைப் பின்பற்றித் தேவர்கள் போனார்கள். இந்த நிகழ்ச்சியிலும் தேவர்களைக் காட்டிலும் முருகனை அணுகும் திறத்தில் மனிதர்களே சிறந்த வர்கள் என்பது தெரியவரும். வருங்காலத்துக்குப் பாதுகாப்பு மனிதனாகப் பிறந்தவனுக்கு மற்றது பற்றிய அறிவு இருக் கிறதோ இல்லையோ, ஒன்று மாத்திரம் நிச்சயமாக அவன் தன் கவனத்தில் வைக்கிறான். வருங்காலத்தில் துன்புறாமல் சேமித்து வைக்கவேண்டுமென்ற நினைவு எல்லோருக்கும் இருக்கிறது. அப்போதைக்குச் சேமித்துக் கொள்ளலாம் என்ற நிச்சயம் இல்லா மையினால், நாளைக்கு வேண்டியதையும் இன்றைக்கே சேமித்துக் கொள்ள வேண்டுமென்ற ஆசை உண்டாகிறது. இதுவும் அறி வினாலே உண்டாகின்ற காரியந்தான். இதே அறிவைக் கொண்டு இந்தப் பிறவிக்குப் பின்னும் பயன்படுகிற காரியங்களைச் செய்ய வேண்டுமென்ற உணர்வு தோன்றுவது நியாயமாகும். மறுநாளைக்கு 45