பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 5 இத்தகைய கருவிகள் இல்லாவிட்டாலும் இயற்கையில் அமைந்த பிரபஞ்சமே இறைவனை வழிபடுவதற்குப் போது மானது. 'காக்கைச் சிறகினிலே நந்தலாலா - உன்றன் கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா" என்று பாரதியார் பாடுவார். இறைவனை வழிபட வேண்டுமென்ற ஆர்வம் யாருக்கு வருகிறதோ அவர்கள் எல்லாவற்றையும் பயன் படுத்திக் கொள்வார்கள். எங்கும் இறைவனுடைய திருவுருவத்தைப் பார்ப்பார்கள். அதற்கு ஏற்ற பிறவியை நாம் பெற்றிருக்கிறோம். இருவகை நிலை இந்தப் பிறவி பெறுவதற்கு அரியது என்று சொன்னவுடன், இந்த உடம்பைப் பாதுகாக்க வேண்டுமென்ற நினைவு உடனே வருகிறது. பெறுதற்கு அரிய பொருளைப் பெற்றுவிட்டோம்; இதனாலே வருகின்ற இன்பங்களைப் பெறவேண்டுமென்ற ஒரு வகை நினைப்பும் மக்களுக்கு உண்டாகலாம். இந்த உடம்பினால் அடைகின்ற இகலோக இன்பங்களைப் பெறுவதுதான் பிறவிப் பயன் என்று நினைத்துப் பலர் தம் வாழ்நாள் முழுவதையும் இந்திரிய சுகம் பெறப் பயன்படுத்துகிறார்கள். அவர்களும் பெறு தற்கரிய பிறவி இது என்று உணர்ந்திருக்கிறார்கள். காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள வேண்டும் என்று அவர்களும் சொல் கிறார்கள்; பக்தர்களும் சொல்கிறார்கள். இரண்டு வகையினரும் உடம்பைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இரண்டுக்கும் வேறுபாடு உண்டு. இந்த உடம்பை உடம்பி னுடைய சுகத்திற்காகப் பயன்படுத்திக் கொள்கிறவன் முதல் வகையினன். இந்த உடம்பைக் கருவியாகக் கொண்டு பயன் படுத்திக் கொள்கிறவன் பக்தன். இரண்டு பேருக்கும் இந்த உடம் பிலே பற்று இருக்கும். ஆனால் முதல் வகையினனோ இந்த உடம்பினால் வேறு ஒன்றைச் சாதித்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறது இல்லை. பக்தனோ இந்த உடம்பினால் உடம்பை அறுக்கின்ற ஒரு வகை முடிவைச் சாதிக்க நினைக் கிறான். இரண்டு பேரும் சரீரத்தில் அன்பு உடையவர்கள்தாம். 'உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே' 5O