பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெறுதற்கரிய பிறவி திருவடியைப் பற்றுதல் மனிதப் பிறவியின் பயனாக இறைவனுடைய தத்துவத்தைத் தெரிந்து கொள்ளவில்லையே, வேதத்தை வாசிக்கவில்லையே, இறைவனுடைய உருவம் அவ்வளவும் பார்க்கவில்லையே என்று வருந்தவில்லை அருணகிரியார். இத்தனையையும் நாம் செய்வது கடைசியில் அவன் திருவடியைப் பற்றிக் கொள்வதற்காகத்தான். 'கற்றதனா லாய பயன்என்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅ ரெனின்" என்று வள்ளுவர் சொன்னார். இறைவனுடைய தாளை வணங்கு வதுதான் அறிவின் பயன். அப்போதுதான் நம் அகந்தை அடங்கும். அவன் நம்மைக் குறுகினாலும் அவனது அடியைப் பாராது உயரே பார்க்கிற மனிதர்களும் இருக்கிறார்கள். சூரபன்மன் அப்படித்தான் முதலில் பார்த்தானாம். - 'கோலமா மஞ்ஞை மீதிற் குலவிய குமரன் தன்னைப் பாலனென் றிருந்தேன் அந்நாள்; பரிசிவை உணர்ந்திலேன்யான்; மாலயன் தனக்கும் ஏனை வானவர் தமக்கும் யார்க்கும் மூலகாரணமாய் நின்ற மூர்த்திஇம் மூர்த்தி அன்றோ?' என்று அறிவு வந்த பிறகு சொல்கிறான். பணிதல் அடியைக் குறுகினால் பணிவு உண்டாகும். 'நான் உன் சிற்றடியைக் குறுகவில்லையே' என்று சொன்னவர் அதற்கு அடுத்த நிலையாக, 'உன் திருவடியைக் குறுகி அந்தச் சிற் றடியைப் பணியவில்லையே!' என்று சொல்கிறார். - குறுகிப் பணிந்து, ஆண்டவன் திருவடி என்பது ஞானமே வடிவமானது. அதனைப் பற்றிக் கொண்டால் அதுவே மோட்சமாகப் பரிண மிக்கும். முதலில் அதைக் காணும்போது நம்முடைய உள்ளத்தில் ஆசை உண்டாகும்; இதனைப் பற்றவேண்டுமென்ற ஆர்வம் உண்டாகும். கண்களால் கோயில்களில் உள்ள ஆண்டவன் திருவடியைக் காணலாம். அந்த உருவை உள்ளத்திலேயும் காண வேண்டும். இந்த இரண்டு வகையினாலும் அவனைக் குறுக வேண்டும். பின்பு செயல் தோன்ற வேண்டும். 61