பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 5 கொடி படர்ந்த தோள் அருணகிரியார் தேவயானையைச் சொல்வதை இனி விவர மாகப் பார்க்கலாம். அவள் யானையினால் வளர்க்கப் பெற்ற, யானைக்குப் பெண்ணாகிய கொடி போன்றவள். யானை மலையைப் போல இருப்பதால் அதை மலை யென்றும் சொல்வது உண்டு. மலைக்கும் அதற்கும் வேறுபாடு காட்டுவதற்காக மதமலையென்று சொல்வார்கள். மலைபோன்ற ஜராவதத்தால் வளர்க்கப்பெற்ற இன்பக் கொடி தேவயானை என்று பாடுகிறார் அருணகிரியார். மதகும்ப கம்பத் தறுகட் சிறுகட் சங்க்ராம சயிலம் என்று ஐராவதத்தைக் குறிக்கிறார். மதம் நிரம்பியது. மதநீர் வழி கின்ற மத்தகத்தை உடையது. எப்போதும் அசைந்து கொண்டே இருப்பது. கடுமையானது. சிறிய கண்ணை உடையது. இவை யாவும் யானைக்கு இலக்கணம். போரில் இந்திரன் ஐராவதத்தின் மேல் ஏறிப் போர் செய்வான். அப்போது எதிரிகளை எதிர்த்துப் போராடி வெற்றி கொள்வது அந்த யானை. சங்க்ராமம் - போர். போரில் மலைபோன்று நிற்கிற ஐராவதத்தை, மதகும்ப கம்பத் தறுகட் சிறுகட் சங்க்ராம சயிலம் என்று வருணித்தார் அருணகிரியார். அந்தச் சயிலத்தினுடைய பெண்ணாகிய கொடி போன்றவள் தேவயானை, சரசம் என்பது இன்பம் என்ற பொருள் உடையது. சங்க்ராம சயில சரசவல்லி. இந்தக் கொடி முருகப் பெருமானுடைய தோளில் படர்ந்தது. இறுகத் தழுவும் கடகாசல பன்னிரு புயனே. தேவயானை முருகப் பெருமானை இறுகத் தழுவினாள்; தழுவி இன்புற்றாள். அந்தத் தோள்களும் மலையைப் போல உயர்ந்து நிற்பவை. மலைக்கும் அவன் தோளுக்கும் வித்தியாசம், அந்தத் தோளில் கடகம் அமைந்திருப்பது. கடகம் அமைந்த பன்னிரண்டு மலைகளைப் போன்ற தோள்களை உடையவன் முருகன். மதம் பொழிகின்ற சங்க்ராம சயிலம், யானை, அதனால் வளர்க்கப் 8O