பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 மூன்று தலைகளையுடைய சூலத்தைக் கையில் பிடித்த சிவபெருமானுடைய குழந்தை வேலாயுதக் கந்தசுவாமி. முத்தலைகளை உடைய சூலத்தின் இலைகளைச் சேர்த்தால் அதுவே வேலாகிவிடும். சூலத்தைச் சூலவேல்' என்றும் சொல் வார்கள். பிணைக்கப்படாத மூன்று தலைகளை உடைய சூலத்தைப் பிடித்திருக்கும் எம்பெருமான் தந்த கந்தசுவாமி, மூன்று தலைகளும் ஒன்றாகப் பிணைத்திருக்கும் வேலைக் கையில் பிடித்திருக்கிறான். அந்தத் தந்தையின் பெருமை என்ன? சூலாயுதம் தாங்கி நிற்கும் அவன் கோலத்தைப் பார்க்க வேண்டுமென்று இரண்டு மாவீரர்கள் படாத பாடுபட்டு முயற்சி செய்தார்கள். அவர்களால் காண முடியவில்லை. சங்கு சக்ராயுதன் விரிஞ்சன் அறியாச் சூலாயுதன். சங்கத்தையும் சக்கரத்தையும் ஆயுதமாகக் கொண்டவனாகிய திருமால், விரிஞ்சன் ஆகிய பிரமன் என்னும் இரண்டு பேரும் அறிய முடியாத சூலாயுதக் கடவுள் சிவபெருமான். சங்கு ஆயுதமா? சக்கரத்தை ஆயுதமாகச் சொல்லலாம். சங்கம் வாத்தியம் அல்லவா? கல்யாண கோலத்தில் மங்களச் சங்கு ஊதுகிறது வழக்கமாயிற்றே. அதை ஆயுதமாகச் சொல்லலாமா? திருமால் திருக்கரத்தில் ஐந்து ஆயுதங்கள் உண்டு. சங்கு, சக்கரம், கதை, அம்பு, வில் ஆகிய ஐந்து ஆயுதங்களில் ஒன்று சங்கம். ஒவ்வொரு காரியத்தைச் செய்கின்றபோது ஒவ்வொரு வகையான கருவி பயன்படுகிறது. திருமாலுக்குச் சங்கம் ஆயுத மாக எவ்வாறு பயன்பட்டது என்பதைப் பின்னால் ஒரு பாட்டில் அருணகிரியார் சொல்லப் போகிறார். பாரிசாத மலர் கொண்டு வரப்போன கண்ணனை எதிர்த்த தேவர்களின் கூட்டம் அந்தச் சங்கத்தின் முழக்கத்தைக் கேட்டுக் கீழே மயங்கி விழுந்ததாம். மோதிப் பகைவர்களைக் கொலை செய்கின்ற ஆயுதம் பல. ஊதிப் பகைவர்களை மாய்க்கின்ற ஆயுதம் சங்கம். மோதி அழிக்கும் படைக்கு எத்தனை பெருமை உண்டோ, அத்தனை பருமை ஊதி அழிக்கும் படைக்கும் உண்டு. அதனால்தான் ங்கத்தையும் சக்கரத்தையும் திருமால் வைத்திருக்கிறார். 92