பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இணக்கமும் வணக்கமும் நல்ல இனம் 'இனம் இனத்தோடு சேரும்' என்று சொல்வார்கள். நம் முடைய பண்புக்கு ஏற்றபடி அந்தப் பண்பை வளர்க்கின்ற மக்க ளோடு சேருவதுதான் நம்முடைய இயல்பு. நமக்கு அறிவைக் கொடுத்திருக்கிறான் ஆண்டவன். நம்மிடத்தில் உள்ள தீங்கை மாற்றுவதற்கு ஏற்பச் சிறந்த மக்களோடு சேருவதற்கும் வாய்ப்பு உண்டு. உடம்பில் அழுக்கு இருக்கும்போது அழுக்கோடு புரண்டு கொண்டிருப்பவன் அறியாதவன். அழுக்கை நீக்குவதற்கு ஆண்டவன் புனலைக் கொடுத்திருக்கிறான். அழுக்கைப் பூசிக் கொண்டு வாழாமல் அதனை மாற்றிக் கொள்வதற்குரிய நீரைப் பயன்படுத்திக் கொள்பவன் அறிவாளி. அதுபோல இந்த உலகத் தில் அழுக்கு நெஞ்சு உடையவர்களும் இருக்கிறார்கள்; தூய நெஞ்சு உடையவர்களும் இருக்கிறார்கள். மனிதன் பிறந்தவுடன் எந்தப் பழக்கத்தையும் கொண்டு வருவது இல்லை. பழைய பிறவியில் இருந்த அவனுடைய சம்ஸ்காரங்கள், சில குணங்கள், இயல்பாக இருக்கின்றன. ஆனாலும் அவற்றை மெல்லப் போக்கிக் கொள்வதற்கு நல்ல குணங்கள் உள்ளவர்களோடு இணங்க வேண்டும். அப்படி இணங்குவதனால் குற்றங்கள் மாய்ந்து, குணங்கள் பெருகும். விலங்குகள்கூட மனிதர்களோடு பழகினால் தம்முடைய குணங்களில் சிலவற்றை மாற்றிக் கொள்கின்றன. 'நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு இனத்தியல்பதாகும் அறிவு' என்பது திருக்குறள். நல்லன நினைத்தல் முதலியன நாம் அறிவு விளக்கம் பெறுவதும், குணம் சிறந்து நிற்பதும் நல்லவர்களுடைய இணக்கத்தினால் அமையும். அல்லாதவர் களுடைய இணக்கத்தால் நம்பாலுள்ள தீய குணங்கள் வளர்வ தன்றி, அவர்களுடைய தீய குணங்களும் நம்மைச் சாரும். மனிதன் வரவர நல்லவற்றை எண்ணவும் நல்லவற்றைப் பேசவும் நல்ல வற்றைச் சிந்திக்கவும் வேண்டும். இவற்றை இயல்பாகப் பெறா விட்டாலும் சிறந்து நிற்பவர்களுடன் இணங்க வேண்டும். நல்லவற்றை நினைக்கவே நமக்குத் தெரிவதில்லை. பெரியவர் 111