பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 மெய்ஞ்ஞான தெய்வம் ஆண்டவன் அழகுத் தெய்வம். அழகு பொருந்தியவர் களோடு உறவு உடைய தெய்வம். தேசு பொருந்திய திருமேனி படைத்த தேவர்களுக்குத் தலைவன் என்று சொன்ன பிறகு, மெய்ஞ்ஞான தெய்வத்தை என்று சொல்கிறார். வெறும் புறக்கோலம் மாத்திரம் இருந்தால் சிறப்பு அமையாது. ஆண்டவன் ஞான சொரூபமாக இருக்கிறவன். தன் புறக்கோலத்தைக் கண்டு இன்புறுகிறவர்களுக்கு அகத்து ஒளியாகிய ஞானம் புலனாகும்படி செய்கிறவன் முருகன். ஞானத் தில் பலவகை உண்டு. பொதுவாக அறிவு என்று சொல்வதையே ஞானம் என்று சொல்வார்கள். பாஷா ஞானம் என்று சொல் கிறோம்; சங்கீத ஞானம் என்று சொல்கிறோம். இவை எல்லாம் உலகத்தோடு பொருந்திய கல்வியறிவு. இந்த ஞானங்கள் எல்லாம் நிலையாக நிற்பது இல்லை. ஆன்ம அநுபவத்திற்கு உதவும் ஞானம் எதுவோ அதுதான் மெய்ஞ்ஞானம். அதனை மெய்யறிவு என்று சொல்வார்கள். இந்த அறிவே வடிவமாக, மெய்ஞ்ஞானம் தரும் வள்ளலாக விளங்குகிறவன் முருகன். ஆதலின் அவனிடம் புற அழகோடு அக அழகும் சிறந்து நிற் கின்றது. அவனுடைய புற அழகைக் கண்டார்களுக்கு மோகம் பிறவாது; ஞானம் உண்டாகும். ஆதலின் முன்னே அவனுடைய அழகின் பெருமையைச் சொன்னவர், அதன் விளைவாக வரும் ஞானத்தை இங்கே சொல்கிறார். இவ்வளவும் சொன்ன பிறகு முருகனுடைய பெருமை தெரிகிறது. அதோடு அவனுடைய அருமையும் தெரிகிறது. மேதினியில் திருமால் மிகப் பெரியவர். வைகுண்டத்தில் இருப்பவர். சிவபெருமானோ கைலாயத்தில் இருப்பவர். அந்த இரண்டு பேரும் மிகவும் எளியவர்களாக வருபவர்கள் அல்ல. அவர் களுக்கு உறவினன் முருகன். தேவர்கள் நம்மைக் காட்டிலும் பெரியவர்கள். மேலுலகத்தில் இருப்பவர்கள். அவர்களுக்கு எல்லாம் மேலானவனாக உயர்ந்த நிலையில் இருப்பவன் அவன். அப்படியாயின், அவ்வளவு உயர்ந்த நிலையில் இருப்பவனுக்கும் 16O