பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாலாயிரம் கண் கலை. நடனம் செய்கிறவர்கள் தம்மை அழகுபெற அலங்கரித்துக் கொண்டிருப்பார்கள். கலைச் செல்வர்களிடத்தில் அழகு நிரம்பி யிருப்பதை இன்றும் நாம் பார்க்கிறோம். இயற்கை அழகு. நிரம்பிய மாமியார் மாமனாருக்கு மாப்பிள்ளையாக இருக்கிற முருகனை, பல அலங்காரங்கள் செய்து கொண்டிருக்கிற கலைச் செல்வருக்குப் பிள்ளை என்று சொல்வதனால் அவனுடைய அழகுப் பெருமை பின்னும் நிரம்புகிறது. மேலான தேவன் இப்படியுள்ள பெருமான் மிகச் சிறந்தவன் என்பதை அடுத்த படி சொல்ல வருகிறார். அவன் தேவர்களுக்குள் ஒரு தேவன் அல்ல. வானவர்க்கும் மேலான தேவனை. சைவம், வைஷ்ணவம் என்ற இரண்டு சமயத்தினரும் முரு கனைக் கொண்டாடுவதற்கு உரிமை இருக்கிறது. வைஷ்ண வர்கள் தங்கள் வீட்டு மாப்பிள்ளை என்று கொண்டாடலாம். சைவர்கள் தங்கள் வீட்டுப் பிள்ளை என்று கொண்டாடலாம். வானவர்களுக்கோ அந்த இரண்டு மூர்த்திகளும் தலைவர்கள். ஆகையால் இரண்டு வீட்டுக்கும் உரிமை உடைய பெருமானை, ‘எங்கள் அனைவருக்கும் மேலான தலைவனாக இருக்கிறவன்' என்று வானவர்கள் கொண்டாடுகிறார்கள். ஆகையால் வானவர் களுக்கும் மேலான தேவன் என்று சொன்னார். சிவபெருமானுக்கு மகாதேவன் என்று ஒரு பெயர். ‘'தேவர்கோ அறியாத தேவ தேவன்' என்று மணிவாசகர் பாடுகிறார். அவன் தேவர்களில் ஒருவனாக வைத்து எண்ணப்படுபவன் அல்லன். அவர்களால் அறியப்படாமல், அவர்களுக்கு மேலே அவர்களுடைய தலைவனே அறிய முடி யாதவனாம். முருகனும் அத்தகையவனே. * அவர்களுடைய சேனைத் தலைவனாக, அவர்களில் ஒருவ னாக, ஆண்டவன் இருந்தான். அந்தக் கதையைக் கொண்டு யாரா வது முருகன் தேவர்களுக்குள் ஒருவன் என்று எண்ணிவிட்டால் என்ன செய்வது என்ற நினைப்பினால், அவனை வானவர் களுக்கும் மேலான தேவன் என்று இங்கே சொன்னார். 159