பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 தேவசேனைக்கும், வள்ளிக்கும் அழகான மாப்பிள்ளையாகிய ஒருத்தனைத் தேடிக் கொண்டார்கள். அவன்தான் முருகன். அவன் உரிமையுள்ள மாப்பிள்ளை, திருமாலுக்கு மருகன். உரிமையும், அழகுப் பெருமையும் உடைய மாப்பிள்ளை என்பதை, மாலோன் மருகனை என்பதனால் நினைவூட்டுகிறார் அருணகிரியார். அழகான மாம னாருக்கு மருமகப் பிள்ளையாக இருக்கிற அழகன் திருச்செங் கோட்டில் இருக்கிறான். அவன் கண்ணாலே காண்பதற்குரிய திருக்கோலம் படைத்திருக்கிறான் என்பதைச் சொல்ல வருகிறார். ஆகையால் இங்கே சூரசங்காரம் செய்த பெருமான் என்றோ, ஞான பண்டிதசாமி என்றோ சொல்லவில்லை. அவன் அழகன் என்பதைத் தெரிந்து கொள்ளக்கூடிய வகையில் வருணனை செய்யத் தொடங்கினார். மன்றாடி மைந்தன் இனி அடுத்தபடி சிவபெருமானுடைய பிள்ளை என்று சொல்ல வருகிறார். பல இடங்களில் சிவபெருமானுடைய மைந்தன் முருகன் என்பதைப் புலப்படுத்தியிருக்கிறார். முதல் பாட்டிலேயே, செஞ் சடாடவிமேல் ஆற்றைப் பணியை இதழியைத் தும்பையை அம்புலியின் கீற்றைப் புனைந்த பெருமான் குமாரன்." என்றார். அப்படிச் சொல்லும்போதெல்லாம் ஏதாவது குறிப்பை வைத்தே சிவபெருமானை அவர் வருணிப்பார். இங்கே முருகன் கண்ணுக்கு அடங்காத பேரழகன் என்பதை வற்புறுத்த வருகிறவர், அதற்கு ஏற்ற வகையில் அவன் திருமாலுக்கு மாப்பிள்ளைத் துரை என்று தொடங்கினவர், சிவபெருமானுடைய பிள்ளை எனபதை, மன்றாடி மைந்தனை என்று சொல்கிறார். நடராசப் பெருமானுக்குக் குழந்தை என்று இங்கே சொல்வதற்கு என்ன காரணம்? நடராசப் பெருமான் கூத்தாடும் பெருமான். எல்லாக் கலைகளும் சேர்ந்த கலை நடனக் 158