பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 அப்பிராட்டியை எடுத்து அணைத்துப் பன்னீர் தெளித்து உபசாரம் செய்தான். விழித்து எழுந்த ருக்மிணியைப் பார்த்து, 'உன் இயல்பைத் தெரிந்து கொள்வதற்காக நான் இப்படிப் பேசினேன்: என்று சொல்லிச் சமாதானப்படுத்தினான். 'என் உயிர்த் துணை யாகிய உன்னை நான் கனவிலும் மறக்க மாட்டேன்' என்று கண்ணன்சொல்ல, "எம்பெருமானாகிய தங்களுடைய திருத்தாளை யன்றி வேறு எதையும் அறியாத ஏழையாகிய என் உயிர் போகும் அளவுக்குத் துன்பத்தைத் தருகிற வார்த்தையை நீங்கள் சொன்னீர் களே! என்று கூறிப் பின்னும் சொல்ல ஆரம்பித்தாள். “தாங்கள் நல்ல உருவம் இல்லாதவர்கள் என்று சொன்னீர் கள். அப்படிச் சொன்னது உண்மை. தாங்கள் உருவம் கடந்த பெருமான். வேத நெறியைத் தப்பி ஒழுகியதாகக் கூறினீர்கள். தாங்கள் வேதத்திற்கு எட்டாத பரம்பொருள் என்பதை நான் உணர்வேன். வருணத்தில் தாழ்ந்த குலத்தினரோடு பயின்றேன் என்று சொன்னீர்கள். தாங்கள் அனந்தனாகையால் எல்லாக் குலத் திலும், எல்லாரிடமும் இருக்கிறீர்கள். என்னை யார் அறிவார்கள் என்று சொன்னீர்கள். தங்களை உணர்வதற்குரிய ஆற்றல் உள்ள வர்கள் யாரும் இல்லை. ஆகையால் தாங்கள் சொன்னவை எல்லாம் ஒரு வகையில் மெய்யே' என்று புன்னகை பூத்தாள். பின்பு இருவரும் மகிழ்ந்திருந்தார்கள். நாரதர் செய்த கலகம் விடிந்தது. அப்போது நாரத முனிவர் வீணையை இசைத்துக் கொண்டு அங்கே வந்து சேர்ந்தார். கண்ணபிரானும், ருக்மிணிப் பிராட்டியும் அவரை வணங்கி, அர்க்கிய பாத்திய ஆசமனியம் அளித்து உபசாரம் செய்தார்கள். அப்போது அம்முனிவர் கண்ண பிரானுடைய கையில் பாரிசாத மலர் ஒன்றை அளித்தார். அதனைக் கண்ணபிரான் ருக்மிணியின் திருக்கரத்தில் ஈந்தான். ருக்மிணி அதனைத் தன்னுடைய குழலில் சூட்டிக்கொள்ள, அது கண்டு நாரத முனிவர், 'இந்தப் பாரிசாத மலர் இப்பெருமாட்டியின் கூந்தலில் சேர என்ன தவம் பண்ணியதோ?' என்று பாராட்டினார். பின்பு கண்ணபிரானிடம் விடைபெற்றுக்கொண்டு புறப்பட்டார். நாரதர் எப்போதும் கலகம் செய்கிறவர் என்பது புராணங்களை உணர்ந்தவர்களுக்குத் தெரியும். இப்போதும் ஒரு கலகத்தை 2C4