பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 வாடி நின்ற ஒருவன், அது இருக்கிற இடம் தெரிந்த பிறகு எப்படியாவது அதை அடைய வேண்டுமே என்ற கவலையோடு சென்றது போல இருந்தது. வள்ளியை வேட்டவன் னைப்புனம் காக்கும் வள்ளியிடம் சென்று பலவகையான மாயங்களைச் செய்து அவள் உள்ளத்தைச் சோதனை செய்தான். அவளுடைய உறவை மீட்டும் இணைத்துக் கொள்ள விரும்பி னான். வேட்பவனாக நின்றான். தன்னை அவள் வேட்பது முறை யாக இருக்க, அவளைத் தான் வேட்டான். இது அவனுடைய பெருங் கருணையைக் காட்டுகிறது. தெள்ளிய ஏனலில் கிள்ளையைக் கள்ளச் சிறுமியெனும் வள்ளியை வேட்டவன் என்று முருகனைச் சொல்கிறார். வேட்டவன் என்பது திருமணம் புரிந்து கொண்டவன் என்ற பொருளை உடையது. "மொய்தார் அணிகுழல் வள்ளியை வேட்டவன்' என்று வேறு ஒரிடத்தில் சொன்னார். தானே அவளை ஆட்கொள்ள வேண்டுமென்று விரும்பி வந்தவன் ஆகையால், வேட்டவன் என்று சொன்னார். ஈகை மனிதனுக்குரிய சிறந்த பண்புகளில் ஒன்று. யாரேனும் ஒருவர் ஒரு பொருளைக் கேட்டால் அதைக் கொடுக்காமல் மறுக்கிறவன் - இல்லையென்று சொல்கிறவன் - அதமன். கேட்டவுடன் கொடுப்பவன் மத்திமன். ஆனால் கேட்ப தற்கு முன்னால் அவனுக்கு இது வேண்டுமென்று அறிந்து தானே வலியச் சென்று கொடுக்கிறவன் உத்தமன். முருகப் பெருமான் உத்தமமான கருணையாளன். தன் கருணை எங்கே செல்ல வேண்டுமோ அதனை அறிந்து தானே வலியச் சென்று ஆட் கொள்பவன். இந்தச் சிறந்த பண்பை வள்ளி நாயகியிடம் முருகன் காட்டினான். அவள் தன்னை நாடி வருகிறவரைக்கும் காத்திராமல் அவள் உள்ள இடத்திற்கே சென்று அவளைத் தடுத்து ஆட்கொண்டு பழைய உறவை நிலைநாட்டிக் கொண்டான். கள்ளத்தனமாக இருந்த பொருளை எல்லோரும் காண நானே பெறுவேன் என்று சொல்லி ஏற்றுக் கொண்டான். அத்தகைய முருகனை நீ பணியவில்லையே! அவன் திருத்தாளில் விருப்பத்தை வைத்து வழிபாடு செய்யவில்லையே! என்கிறார் அருணகிரியார். 232