பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 இது போலவே இந்த வாழ்க்கையில் நாம் ஈட்டிக் கொள்ளும் பண்புகள் இந்த வாழ்க்கைக்குப் பிறகும் தொடர்ந்து வரும், சின்னஞ்சிறு பிராயத்திலுள்ள உடம்பு இப்போது நமக்கு இருப்பது இல்லை. அது வளர்ந்தோ, குறைபட்டோ அமைகிறது. ஆனாலும் மன இயல்பு மாறுவது இல்லை. அது போல் இந்தச் சரீரம் போய் வேறு ஒரு சரீரம் மற்றொரு பிறவியில் கிடைத்தாலும், இப்போ துள்ள வாழ்வின் அம்சங்கள் அந்தப் பிறவியிலும் தொடர்ந்து வரும். அவற்றின் தொகுதியை வாசனை என்று சொல்வார்கள். மனத்தைப் பண்படுத்திச் சிறந்த வகையில் அமைத்துக் கொண்ட வன் அடுத்த பிறவியிலும் அந்த மனம் தொடர்வதால் இங்கே பாடுபட்டதன் விளைவை அந்தப் பிறவியிலும் பெறலாம். 'ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப்பு உடைத்து' என்று திருவள்ளுவர் சொல்வர். ஆகையால் மனத்தோடு சம் பந்தப்பட்ட முயற்சிகள் பிறவிதோறும் தொடர்ந்துவரும் என்பது ஒர் உண்மை. இந்த நாட்டில் அதனைப் பலவகையில் வற்புறுத்தி யிருக்கிறார்கள். முன்னைப் பிறவியில் செய்த புண்ணிய பாவங் களின் பயன் அடுத்த பிறவியிலும் வரும் என்றும், முன் பிறவி களில் காதல் செய்தவர்கள் பின்பும் காதல் செய்யும் வாய்ப்புப் பெறுவார்கள் என்றும், முன் பிறவியில் கொண்ட ஆசை பின் பிறவிகளுக்கு ஏதுவாகும் என்றும் நூல்கள் சொல்கின்றன. உடம்பு வாழ்வு இந்தப் பிறவியோடு நின்றாலும் உயிர் வாழ்வு தொடர்ந்து வருகின்றது என்பதைக் காட்டும் ஆதாரங்கள் இவை. உடம்பின் அளவுக்கு மாத்திரம் சாரும் செய்கையைச் செய் கின்றவனுக்கு இந்த உடம்பு போனால் அந்த முயற்சியினால் வருகிற பலன் இல்லையாகிவிடும். விரலில் மோதிரம் போட்டுக் கொள்கிறான் ஒருவன். அவனுக்கு அந்த விரல் போய்விட்டால் மோதிரத்தினால் பயன் இல்லை. அதுபோல் உடம்பு சம்பந்தமாக மட்டும் செய்கிற முயற்சிகள் இந்த உடம்பு போய்விட்டால் பயனைத் தருவது இல்லை. ஆனால் முயற்சியின் பயன் உள்ளத் தோடு சார்ந்திருக்குமானால் அடுத்த பிறவிகளில் வந்து பயனைத் தரும். உடம்பு வாழ்வு வேறு; உள்ள வாழ்வு வேறு; உயிர் வாழ்வு வேறு. உயிர் வாழ்வு எப்போதும் இருக்கிறது; உள்ள வாழ்வு பல 244