பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 ஆகர்ஷண சக்திக்கு மூலமாகவும் உள்ளது மேரு. அதையே பொன்மலையாகக் கொண்டாடினார்கள். இப்போது மயிலைப் பாராட்ட வந்த அருணகிரியார் தம்முடைய கற்பனையால் அது மேரு மலைக்கு அப்புறமும் தன் தோகையை வட்டமாக விரித்துக் கொண்டிருப்பதைக் காட்டுகிறார். வடக்கில் கிரிக்கு அப்புறத்தும் நின் தோகையின் வட்டமிட்டு, பூமி முழுவதையும் தன்னுடைய தோகை நிழலால் அமைத்துக் கொண்டு, அதற்கு அப்பாலுள்ள மேருவையும் கடந்து அது நிற்கிறது. பூமிக்கு அப்பால் இருப்பது கடல். மயில் மேருவைக் கடந்து அதற்குமேலும் போகிறதாம். பூமியின் எல்லையாக உள்ள கடலையும் தாண்டி அதற்கு அப்பாலும் போகிறது. நமக்கு நிலமும் கடலுமே தெரிகின்றன. நாட்டைக் கடந்து, மேரு மலையைக் கடந்து, பூமியைக் கடந்து, அப்பாலுள்ள கடலையும் கடந்து சென்றுவிட்டது மயில். அதோடு அது நின்றுவிடுகிறதா? இல்லை. பூமியைக் கடந்து சென்றால் அதற்குப் பிறகு பல கோள்கள் உள்ளன. மயில் போகிற வேகத்தில் அந்தக் கோள்கள் எல்லாம் இடையில் நின்று விடுகின்றன. எல்லாக் கோள்களுக் கும் அப்பால் நெடுந்துாரத்தில் உள்ளது சூரியன். வெகுவேக மாகப் போன மயில் பூமியின் ஈர்ப்புச் சக்திக்கு அப்பாலே சென்று வெளியெல்லாம் கடந்து கதிரவனுக்கு அப்புறமும் சென்றுவிடு கிறதாம். சக்கரவாளம் நாம் காணுகிற நட்சத்திரங்கள் எல்லாம் தனித் தனியே ஒவ்வொரு சூரியனாக இருப்பவை என்று விஞ்ஞானிகள் கூறு கிறார்கள். அகண்ட வெளியில் அந்தக் கோளங்கள் எல்லாம் பந்து களைப்போல மிதக்கின்றன. சூரியனை மையமாக வைத்துக் கிரகங்கள் அதைச் சுற்றிக் கொண்டே இருக்கின்றன. நாம் வசிக்கும் பூமி நாம் காணும் சூரியனைச் சுற்றி வருகின்ற உருண்டை. இது போலவே ஒவ்வொரு நட்சத்திரமும் ஒவ்வொரு சூரியனானால் அந்த அந்தச் சூரியனைச் சுற்றி உலவுகின்ற கிரகங்களும், கோளங்களும் பலப்பலவாக இருக்கும். இப்படியுள்ள அண்டங் 274