பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 வந்த திசையைப் பார்த்தார்கள். அங்கே மாடு மேய்த்துக்கொண் டிருந்த இளைஞன் ஒருவன் தன் கைக்கோலை ஆட்டிக்கொண்டு பாட்டைச் சொல்லிக் கொண்டிருந்தான். 'அஃது ஆய்ந்திலையோ? நமரன் குறவள்ளி பங்கன் எழுகரை நாட்டுயர்ந்த குமரன் திருமரு கன்மயில் வாகனம் கொத்துமென்றே: என்று அந்தப் பாட்டின் பிற்பகுதியை இளைஞன் சொன்னான். எழுகரை நாடு என்பது திருச்செங்கோடு உள்ள சிறிய நாட்டுக்குப் பெயர். கொங்குநாட்டில் இத்தகைய நாடுகள் பல உண்டு. எழுகரை நாட்டிலுள்ள குமரப் பெருமானுடைய வாகனமாகிய மயில், நாம் படம் எடுத்து ஆடினால் கொத்திவிடுமே என்று அஞ்சி அந்தப் பாம்பு படம் விரித்து ஆடாமல் இருக்கிறது. இது உனக்குத் தெரியாதா?’ என்ற கருத்து அந்தப் பாட்டின் பிற்பகுதியில் அமைந்திருக்கிறது. முன் அமைந்த கேள்விக்கு ஏற்றபடி இந்த விடை இருந்ததனால், கேட்டவர்கள் எல்லோரும் வியப்படைந்தார்கள். பிரதிவாதி பயங்கரனோ முகம் வெளுத்துத் தோல்வியுற்றவனைப் போலானான். இதுவரைக்கும் நான் பெரும் புலவன் என்று அகங்கரித்தேன். இந்த இளைஞன் நம்மைத் தோல்வியுறச் செய்துவிட்டானே இவன் யார் தெரியவில்லையே! என்று உள்ளம் மறுகினான். "அவன் யார் என்று கேளுங்கள் என்று அருகிலுள்ள தன் மாணாக்கர்களுக்குச் சொல்ல, அவர்கள் கேட்டார்கள். அப்போது அந்த இளைஞன் சொன்னான்: "நானா? இந்த ஊரில் குணசீலர் என்னும் புலவர் இருக்கிறார். சிறந்த புலமை யாளர். ஆனால் அவர் புலவர் என்பதை எளிதில் அறிய இயலாது. அடக்கம் மிகுந்தவர். தாம் பெரும் புலவர் என்பதைப் பிறர் காணத் தம்பட்டம் அடித்துக்கொள்ள மாட்டார். எல்லாம் இறைவன் திருவருள் என்று அடங்கியிருப்பார். முருகப் பெருமானிடத்தில் அவருக்குள்ள அன்புக்கு எல்லையே இல்லை. அந்தப் பெரு மானுடைய சந்நிதானத்தில் நின்று பொங்கும் வெள்ளம் போலப் பாடுவார்' என்று இளைஞன் சொல்லிக்கொண்டு வந்தான். பிரதிவாதி பயங்கரனும் இதைக் கேட்டான். 'அது சரி; நீ யார் என்று கேட்டால் என்ன என்னவோ சொல்கிறாயே!” என்று 284