பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேடன் பட்ட பாடு ஏறிக்கொண்டு மாணாக்கர்கள் தொடர்ந்து வர ஆடம்பரமாகத் திருச்செங்கோட்டை அணுகி வந்து கொண்டிருந்தான். அந்த மலையின் பக்கத்தில் அப்போது ஒரு சிறுவன் மாடு மேய்த்துக் கொண்டிருந்தான். அந்த இடத்திற்குப் புலவனும், அவனைச் சேர்ந்தவர்களும் வந்தார்கள். அங்கே இருந்த மலையைப் பார்த்தபோது அதன் பெயர் முதலியவற்றைக் கேட்க வேண்டுமென்ற எண்ணம் புல வனுக்கு உண்டாயிற்று. 'இது என்ன மலை?” என்று அருகில் வந்தவர்களைக் கேட்டான். அவர்கள், 'இதுதான் திருச்செங் கோடு. சர்ப்பகிரி என்றும் சொல்வார்கள்' என்றனர். அந்தப் புலவன் நன்றாக மலையை நிமிர்ந்து பார்த்தான். அது பாம்பு போல இருந்தது. அப்போது அவனுக்கு ஒரு யோசனை தோன் றியது. 'இது சர்ப்பமானால் இந்தப் பாம்பு ஆடாமல் ஏன் படுத்துக்கிடக்கிறது?’ என்ற கேள்வியைக் கேட்டான். பின்பு அதையே பாட்டாகப் பாடினான். பாதிப் பாட்டாக அந்தக் கேள்வியை வைத்துப் பாடினான். 'சமர முகத்திருச் செங்கோடு சர்ப்ப சயிலமெனின் அமரில் படம்விரித் தாடாதது என்னை?” என்ற இரண்டு அடிகள் பாடினான். அவன் அந்தப் பாட்டை முடிக்க வேண்டுமென்றே தொடங்கினான். ஆனால் கேள்வி முடிந்தவுடன் மேற்கொண்டு அவன் அறிவு வேலை செய்ய வில்லை. 'என்னை?' என்பதற்குரிய விடையாகப் பாட்டின் பிற் பகுதி அமைய வேண்டும். திருப்பித் திருப்பி, 'என்னை? என்னை?’ என்று கேட்டான். மீட்டும் மீட்டும், 'சமர முகத்திருச் செங்கோடு சர்ப்ப சயிலமெனின் அமரில் படம்விரித் தாடாத தென்னை' என்று சொன்னான். மேலே ஓடவில்லை. இதுகாறும் அத்தகைய கலக்கம் அவனுக்கு வந்ததே இல்லை. மெளனமாகச் சற்று யோசித்தான். பாட்டு நிறைவேறவில்லை. கையை ஆட்டினான். தலையை ஆட்டினான். ஆனால் அவன் அறிவு ஆடவில்லை. எடுத்த பாட்டை முடிக்காமல் திணறிக்கொண்டிருந்தான். அப்போது, 'அஃது ஆய்ந்திலையோ?" என்ற குரல் அவன் காதில் விழுந்தது. இளங்குரலாக அது தோன்றியது. யாவரும் ஒலி 283