பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொழு கொம்பு கூடி வாழ்தல் 'மனம் வேகின்றதே என்று வருந்திய அருணகிரி நாதர் மறுபடியும் தம்முடைய மனம் பதைக்கின்றதைப் பற்றிப் பாடுகிறார். உலகம் முழுவதும் மக்கள் கூடியிருக்கிறார்கள். எத்த னையோ விதமான கருவிகளை வைத்துக்கொண்டு அவர்கள் தங்கள் செயலைச் செய்கிறார்கள். கூட்டம் கூட்டமாக வாழ்வது மனிதர்களுக்கு இயல்பு. ஊர் என்றும், நாடு என்றும், சமுதாயம் என்றும் பெயர் சொல்லிக் கூடிக்கொண்டு வாழ்கிறார்கள். இடை யிடையே சண்டை போட்டாலும் பெரும்பாலும் கூடிக்கொண்டு தான் எல்லாக் காரியங்களையும் செய்கிறார்கள். ஒருவருக்கு ஒருவர் துணை நின்று பல காரியங்களைச் செய்து கொள்கிறார் கள். இருவர் கூடியும், மூவர் கூடியும், பலர் கூடியும், ஆயிரக் கணக்கில் மக்கள் கூடியும், காரியத்திற்கு ஏற்றபடி துணையைப் பெற்று, உலகத்துச் செயல்களை எல்லாம் நிறைவேற்றிக் கொள் கிறார்கள். ஆகவே, எங்கே பார்த்தாலும் நாம் செய்யும் காரியத் திற்குத் துணையாக, நம்முடைய செயலுக்கு உதவி செய்பவராக, பலர் இருப்பதைக் காண்கிறோம். இவை எல்லாம் உலக வாழ்வுக்குச் சரிதான். பிறர் உதவி சாப்பாடு சாப்பிட வேண்டுமானால் வேறு சிலரை நாடி அவர்களது உதவியைப் பெற்று உண்ணலாம். ஏதேனும் ஒரு சுமையைத் துக்கிக் கொண்டு போக வேண்டுமானால் இன்னும் இரண்டொருவரைப் பிடிக்கச் சொல்லித் தூக்கிக்கொண்டு போகலாம். ஆற்றுக்குப் பாலம் கட்ட வேண்டும்; காட்டுக்குப் பாதை போட வேண்டும்; வீடு கட்ட வேண்டும்; மதில் எடுக்க