பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/338

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விடுதலை "பேற்றைத் தவம் சற்றும் இல்லாத என்னை ப்ரபஞ்சம் என்னும் சேற்றைக் கழிய வழிவிட்டவா!' என்று தொடங்குவது முதற் பாட்டு. இடுதலைச் சற்றும் கருதேனைப் போதம் இலேனை அன்பால் கெடுதல் இலாத் தொண்டரிற் கூட்டியவா! என்பது இங்கே பார்க்கப்போகிற நூறாவது பாட்டு. அங்கே, 'வழிவிட்டவாறு என்ன வியப்பு” என்ற பொருள்படப் பாடி னார். இங்கே, 'தொண்டர்களுடன் கூடும்படி செய்தவாறு என்ன ஆச்சரியம்' என்ற பொருளை அமைத்துப் பாடுகிறார். முதல் பாட்டில், "என்னிடம் இரண்டு இயல்புகள் இல்லை; அவ்வாறு இருந்தும் நீ எனக்கு அருள் செய்தாய்' என்று சொன்னவர் இங்கும் இரண்டு இயல்புகள் இல்லை என்றே தொடங்குகின்றார். அங்கே, "எனக்கு முன் பிறவிலேயே செய்த நன்மையினால் கிடைக்கும் பயனாகிய பேறும் இல்லை; இந்தப் பிறவியிலே முயன்று செய்த தவமும் இல்லை" என்கிறார். சேர்த்துவைத்த பணமும் இல்லை; இப்போது வேலை இல்லா மையால் வருவாயும் இல்லை என்று ஏழை ஒருவன் வருந்திக் கூறுவதுபோல இருக்கிறது அது. இங்கே, "தானம் செய்யவும் அறியேன்; ஞானமும் பெறவில்லை' என்று இரண்டு குறை களைச் சொல்லிக் கொள்கிறார். அங்கே 'பிரபஞ்சம் என்னும் சேற்றைக் கழிய வழி விட்டவா" என்றவர், 'அன்பால் கெடுதல் இலாத் தொண்டரிற் கூட்டியவா!' என்கிறார். அங்கே பிரபஞ்சச் சேற்றினின்றும் விலகித் தூய்மைபெற ஆண்டவன் அருள் செய்தான் என்றார். தூயவர்களோடு கூட்டினான் என்று இங்கே சொல்கிறார். பிரபஞ்ச வாசனை கழிந்து, இந்திரியங்களின் வயப்பட்ட நிலை மாறி, இருவினை கழலச் சரீர அபிமானம் துறந்து ஜீவன் முக்தி பெற வேண்டும். அந்த முடிந்த நிலையாகிய விடுதலையை இந்தப் பாட்டில் சொல்கிறார். முக்தி என்பதற்கு விடுதலை என்பது பொருள். வீடு என்பதும் விடுதலை என்பதும் ஒரே பொருள் உடையன. இரண்டும் விடு என்னும் பகுதியடியாகப் பிறந்த சொற்களே. 327