பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/342

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விடுதலை தாய் அவளை அணுகி ஆறுதல் கூறுகிறாள். "அவர் இறந்து விட்டார். நீயும் போய்விட்டால் குழந்தைகளுக்கு யார் இருக் கிறார்கள்? கொஞ்சம் சாப்பிடம்மா' என்று நயந்து பேசி வற் புறுத்தி உணவு அளிக்கிறாள். வேண்டா வெறுப்பாக அதை அவள் உண்ணுகிறாள். ஒவ்வொரு நாளாகக் காலம் உருண்டு ஒடுகிறது. அவளுடைய துயரம் குறைந்துகொண்டே வருகிறது. ஒருவாறு ஆறுதல் பெறுகிறாள். அவளே சமாதானம் செய்துகொண்டு வேலைகளைக் கவனிக்கிறாள். குழந்தைகளை அரவணைக்கிறாள். இப்போது, கணவனிடத்தில் அவளுக்கு அன்பு உள்ளத்தில் இருக்கலாம். ஆனால் பற்று ஒழிந்துவிட்டது. காலன் அவள் பற்றிக் கொண்டிருந்த பொருளைக் கொண்டு போய்விட்டான். அவ்வாறே நம் மனத்திலே இறுகப் பற்றிக் கொண்டிருக்கிற பொருளைக் கொண்டுபோக ஒரு யமன் வந்தால் நமக்கும் பற்றுட் போகலாம். யமன் வராவிட்டாலும் நாமாக வருவித்துக் கொள். லாமே. கையிலுள்ள பொருளை நம்மிடமிருந்து போக்க ஒரு தந்திரம் செய்ய வேண்டும். அது ஒன்றும் பெரிய காரியம் அன்று. யாருக்காவது கொடுக்கலாம்; பணம் இல்லாமல் துன்புறுகிறவர் களுக்குக் கொடுக்கலாம். கையில் உள்ள பொருளைக் கொடுக் கும்போது முதலில் வருத்தந்தான் உண்டாகும். ஆனால் சிறிது துணிவோடு பழக்கம் செய்து கொண்டுவிட்டால் நாளடைவில் பணத்தினிடம் உள்ள பற்றுத் தேய்ந்துவிடும். ஆகவே, செல்வத்தைப் பிறருக்கு ஈவதனால் மெல்ல மெல்ல அதன்பால் நமக்கு உள்ள பற்றுக் குறைந்து கொண்டே வரும் என்பதை ஒருவாறு தெரிந்துகொண்டோம். RF6)&5 இத்தகைய ஈகையினால் இருவகை நலங்கள் உண்டா கின்றன. பணக்காரனிடம் உள்ள செல்வம் சமுதாயத்தில் உள்ள ஏழை மக்களிடம் பரவலாகச் சென்று நல்ல பயனைத் தருகிறது. இது ஒரு நன்மை; சமுதாயத்துக்கு உண்டாகும் நலம். ஈபவனுக்கு மெல்ல மெல்லப் பற்றுக் குறைந்து வருகிறது. அது அவனுக்கு நலம். இயல்பாகப் பற்றை ஒழிக்க இயலாதவர்களுக்கு ஈகை என்பது அதற்குரிய பயிற்சிபோல உதவும். 331