பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/341

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 கொள்கிறான். மற்றப் பண்டங்களில் வைத்தற்குரிய பற்றை யெல்லாம் ஒரு சேரப் பணத்தின்மேல் வைக்கிறான். நாம் பணத்தை இறுகப் பற்றிக் கொண்டிருக்கும் பற்றுப் போக வேண்டும். காமினி காஞ்சனம் என்னும் இரண்டிலும் உள்ள ஆசை போக வேண்டும் என்று இராமகிருஷ்ண பரம ஹம்ஸர் அடிக்கடி சொல்வார். பணத்தில் உள்ள பெரும் பற்றே உலோபம் என்பர்; அதைப் பற்றுள்ளம் என்றும் சொல்வதுண்டு. ஒரு விதத்தில் பெண்ணின் மீதுள்ள பற்றைவிடக் கொடியது செல்வத்தின்பால் உள்ள பற்று. பெண்ணாசை பருவம் வராதவர் களுக்கு இல்லை; பருவம் முதிர்ந்தவர்களுக்கும் வலிமையுடன் இருப்பதில்லை. பணப் பற்றோ எந்தப் பருவத்தினரிடமும் இருக்கிறது. தியாகம் பொருளிடம் பற்று ஒருவனுக்கு இல்லை என்பதை எப்படித் தெரிந்து கொள்வது? அதை அவன் தியாகம் செய்யத் தயங்க மாட்டான். கண்ணைக் கொடுத்தான் கண்ணப்பன். அவனுக்குச் சரீரத்தில் உள்ள பற்று அற்றுவிட்டது. பிள்ளையைக் கொடுத்தார் சிறுத்தொண்டர். மனைவியைக் கொடுத்தார் இயற்பகையார். இவர்களுக்கு மனைவி மக்கள் என்ற பற்று ஒழிந்தது. அவர்கள் செய்த தியாகத்தால் இந்த இயல்பு புலனாகிறது. பற்று இல்லாதவர்கள் தியாகம் செய்வார்கள் என்பது உண்மை. நாமோ பற்றிலே ஆழ்ந்திருக்கிறோம். நாம் எப்படிப் பற்றை விடுவது? பற்று அற்றவன் செய்யும் காரியத்தை நாம் சிறிது சிறிதாகச் செய்து பழக வேண்டும். தியாக சீலத்தை வளர்க்க வேண்டும். - ப்ற்றுப் போகும் வழி ஒருத்திக்கு அவள் கணவனிடம் மிகுந்த பற்று. அவன் இறந்து போனால் தான் உயிர் வாழ முடியாது என்று நினைக் கிறாள். துரதிருஷ்டவசமாக அவன் இறந்து விடுகிறான். அன்று அவள் படும் துயரத்துக்கு எல்லையே இல்லை என்று தோன்று கிறது. அடிக்கடி மூர்ச்சைபோட்டு விழுந்து விடுகிறாள். அன்று முழுவதும் அவள் உண்ணவே இல்லை. மறுநாள் அவளுடைய 33C)