பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 களில் நமக்குச் சிறந்தது அவனுடைய திருவடி. மற்ற அங்கங் களைப் பூசிப்பதைவிடச் சிறந்து நிற்பது திருவடிப் பூசை பூசையிற் சிறந்தது அருச்சனை என்றால், அங்க அருச்சனையில் சிறந்தது திருவடி அருச்சனை. அதை அன்புடன் செய்ய வேண்டும். அன்பு மனத்திலே நிகழ்வது. 'அருச்சனை வயலுள் அன்புவித் திட்டுத் தொண்ட உழவர் ஆரத் தந்த அண்டத் தரும்பெறல் மேகன் வாழி' என்பது திருவாசகம். சரியை செய்து முதிர்ந்து கிரியையிற் புக வேண்டும். கிரியை பழுத்து யோக நெறியிற் செல்ல வேண்டும். யோகம் முற்றி ஞானமாக வேண்டும். கிரியையில் மனம் ஒருமைப்பாட்டை அடைந்தால் பின்பு யோகம் கைவரப் பெறும். தானே தனி நின்று ஒருமைப்பாட்டை அடைய முடியாதாகையால் மலரைத் துணைக் கொள்ள வேண்டும். அடையாளம் எதை நினைக்க வேண்டும் என்று அறியாமல் திண்டாடுகிற மனத்துக்கு இதோ இதைத் தியானிக்க வேண்டும் என்று மலரால் அடையாளம் இட்டுக் கொள்வது போல இருக்கிறது, அருச்சனை யில் மலரை இடுவது. குழந்தைக்குக் காது குத்த வேண்டுமானால் பொற்கொல்லர் முதலில் குங்குமத்தால் குத்தும் இடத்தில் அடை யாளம் செய்து கொள்வார்; பிறகு குத்துவார். அது போன்றது இது. துப்பாக்கி சுடப் பழகிக் கொள்கிறவர்கள் முதலில் ஒர் இலக்கை வைத்துச் சுடுவார்கள். பழக்கமான பிறகு எதையும் குறிவைத்துச் சுடும் ஆற்றல் வந்துவிடும். அதுபோல இறைவன் திருவடியிலே மலரை இட்டு அதுவே அடையாளமாக அவ்விடத் தில் மனத்தை ஈடுபடுத்த வேண்டும். இந்தப் பழக்கம் அதிக மானால் மலர் இல்லாமலே மனம் திருவடித் தியானம் செய்யும் ஆற்றலைப் பெறும். மனத்தால் தனித்துச் செய்வதற்கு ஆற்றல் அதிகம் வேண்டும். அதுதான் யோக நெறி. 22