பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/355

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 விட்டது பாச வினைவிலங்கே. இரு வினைகளும் பிறவிக்குக் காரணமாக இருப்பவை. தீவினை இரும்பு விலங்கு போன்றது; நல்வினை பொன்விலங்கு போன்றது. வினையே பாசக் கட்டில் நம்மை இருக்கச் செய்கிறது. பாசமும் விலங்கு வினையும் விலங்கு. ஒன்றனோடு ஒன்று நெருங்கிய தொடர்புடையது. இருவினை ஒப்பு உண்டா னால், உடனே மலபரிபாகம் ஏற்படும். பாசம் என்பதும் மலம் என்பதும் ஒன்றே. பாசத்திற்குட்பட்டுச் செய்யும் வினையாதலின் பாசவினை என்றார். 'தறுகட் பாசக் கள்ளவினை' என்பது திருவிளையாடற் புராணம். தேகம் என்னும் சிறை 'வினைப்போகமே ஒரு தேகங் கண்டாய் வினை தான் ஒழிந்தால் தினைப்போ தளவும் நில்லாது கண்டாய்” என்று பட்டினத்தார் கூறுவார். வினைவிலங்கு ஒழிந்தால் தேகம் என்னும் சிறை நில்லாது. வினையென்னும் விலங்கு விட்டதன் பின் நடந்ததைச் சொல்கிறார். இச்சிறை விடுதலைப் பட்டது. இச் சிறை என்றது இந்த உடம்பை. இருவினையின் விளை வாக வருவது இது. காரணமாகிய வினை அற்றபோது காரிய மாகிய உடம்பும் அற்றுவிடும். 'ஏழையின் இரட்டைவினை ஆயதொர் உடற்சிறை இராமல் விடுவித்தருள் நியாயக்காரனும்’ என்று திருவகுப்பில் இதை விளக்கிச் சொல்லியிருக்கிறார். குற்றம் செய்தவனை இன்ன இன்ன குற்றத்துக்காக இத்தனை காலம் சிறையில் இருக்க வேண்டும் என்று தண்டிக்கிறார்கள். நாம் பாவம், புண்ணியம் என்ற இரண்டு குற்றங்கள் செய்தத னால் இந்த உடம்பாகிய சிறையில் இறைவன் தள்ளியிருக் கிறான். 344