பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/381

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 ‘புதுப்பூங் கடம்பும்' என்று முருகன் இருக்கும் இடங்களில் கடம்ப மலரையும் ஒன்றாகச் சொல்கிறது. 'கடம்பமர் காளை' என்பது தேவாரம். முருகன் அணிகின்ற மலர்களில் சிறந்தது கடம்ப மலர். அதனால் கடம்பன் என்ற திருநாமத்தைப் பெற்றான். 'காரலர் கடம்பன்' என்று மணிமேகலையில் வருகிறது. அதனை எப்போதும் அவன் அணிந்து கொண்டிருக்கிறான். அது போகத்திற்குரிய மாலை என்று நச்சினார்க்கினியர் திருமுருகாற்றுபடை உரையில் எழுது கிறார். போர் செய்யும்போது அணிகின்ற மாலை வேறு. மற்றக் காலங்களில் அணிகின்ற மாலை வேறு. முருகன் போர் செய்யும் காலத்தில், காந்தளை அணிவான். அது அவனுக்குரிய கண்ணி, மற்றச் சமயங்களில் கடம்ப மாலையை அணிந்து கொள்வான். தண்டையின் ஒலியைக் கேட்டுத் திருவடியைக் கண்டது போலக் கடம்ப மலரின் மணத்தை நுகர்ந்து அப்பால் தோளை நாம் காண்கிறோம்.முருகப்பெருமான் பன்னிரண்டு தோள்களை உடையவன். 'முன்பு செய்த பழிக்குத் துணை அவன் பன்னிரு தோளும்” என்று அந்தப் பன்னிரு தோள்களைத் துணையாக ஒரு பாட்டில் சொன்னார். இறைவனுடைய புஜபல பராக்கிரமம் ஆருயிர்க்கூட்டங்களுக்கு பகையானவர்களை மாய்ப்பதற்காக அமைந்தது. முருகனுக்கு என்று பகை யாரும் இல்லை. எல்லோரும் நண்பர்கள், அல்லது குழந்தைகள். ஆயினும் நல்லவர்களுக்குத் தீங்கு செய்யும் பொல்லாதவர்களை அவன் தண்டித்து ஒறுக்கிறான். ஒரே தாயின் வயிற்றில் பிறந்த பிள்ளைகள் தமக்குள் சண்டை பிடிக்கும்போது, கொடியவனாக இருக்கும் பிள்ளையைத் தந்தை ஒறுத்து அடக்குவதுபோல, முருகன் சுரர்களுக்கும் மனிதர்களுக்கும் தீங்கு புரிந்த அசுரர்களை அடக்கி ஒடுக்கினான். அப்படி ஒடுக்கும் போது அவனுடைய புய வலிமை பயன்பட்டது. தன்னுடைய பகையை மாற்றுவதற்காக அந்த வலிமையை அவன் கொள்ள 37.2