பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/388

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராப்பகல் அற்ற இடம் மனம் அலைபோல அலைகிறது; மேடுபள்ளத்தோடு இருக்கிறது. ஏழையானாலும், பணக்காரனானாலும் சுகதுக்கம் என்பவை பொதுவானவையே. மனம் அந்த இரண்டுக்கும் ஏற்றபடி மேலேறிக் கீழே இறங்குகிறது. இப்படி இரண்டுவிதமான அலைகள் மனத் தில் மிதந்து கொண்டிருக்கின்றன. கிளர்ச்சியும் தளர்ச்சியும் இல்லாமல், அலையற்ற கடல்போல மனம் அமைந்து கிடக்க வேண்டும். அப்போதுதான் இறைவனுடைய திருவுருவத்தை எழுதலாம. 'உயிரா வணம்இருந் துற்று நோக்கி உள்ளக் கிழியின் உரு எழுதி' என்று பாடுகிறார் அப்பர். நடுநிலை பெரியவர்களுக்கு மனம் நடுநிலையில் நிற்கும். அலை யற்ற கடல்போல அமைதியாக இருக்கும். ஒருவன் பாட்டுப் பாடிக் கொண்டிருக்கிறான். உச்ச ஸ்தாயியில் பாடுகிறான். பின்பு கீழ் ஸ்தாயியில் பாடுகிறான். அவன் எப்படிப் பாடினாலும் அந்தப் பாட்டுச் சுதியோடு ஒட்டியிருக்கும். ஆரோகணம், அவ ரோகணம் ஆகிய இரண்டுக்கும் பொதுவாக ஒடிக் கொண்டிருப் பது சுருதி. ஞானிகளுடைய மனம் எப்போதும் சுருதி போடுவது போல இறைவனை நினைத்துக் கொண்டிருக்கும். அவர்கள் நம்மைப் போலவே பல காரியங்களைச் செய்தாலும் மனம் நடுநிலையிலிருந்து மாறுவது இல்லை. இறைவனுடைய நினைப்பு எல்லாக் காலத்திலும் சுருதி போட்டுக் கொண்டிருக்கும். அந்த நிலையைச் சமநிலை என்று சொல்வார்கள். அது வரவ்ேண்டு மானால் எத்தனையோ காலம் சாதனம் செய்ய வேண்டும். “எத்தொழிலைச் செய்தாலும் ஏதவத்தைப் பட்டாலும் முத்தர் மனமிருக்கும் மோனத்தே - மெத்தனமாய்க் காதிவிளையாடிஇரு கைவிசி வந்தாலும் தாதிமனம் நீர்க்குடத்தே தான்' என்று ஞானிகளுடைய மன நிலையைப்பற்றி ஒரு பாட்டு வருகிறது. கிராமங்களில் குளத்திற்கோ, ஆற்றுக்கோ சென்று தாய்மார்கள் நீர் எடுத்து வருவார்கள். தலையின் மேலே ஒரு 379