பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/389

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 குடமும், அதன் மேல் ஒரு தோண்டியும், அதன் மேல் ஒரு செம்பும், இடையில் ஒரு குடமும் வைத்துக் கொண்டு வரு வதைப் பார்க்கலாம். இடுப்பிலே இல்லா விட்டாலும் தலையில் ஒன்று இரண்டு வைத்துக்கொண்டு வருவார்கள். இப்படி நாலு பேர் சேர்ந்து வரும்போது சும்மா வர முடியுமா? ஊர் விவகாரங் களை எல்லாம் பேசிக் கொண்டு வருவார்கள்; கையை விதிப் பேசுவார்கள். அப்படி அவர்கள் கையை வீசிக் கொண்டும், பேசித் கொண்டும் வந்தாலும் தலையில் இருக்கும் குடத்தை மறந்து விட மாட்டார்கள். அது கீழே விழும்படி தலையை அசைக்க மாட்டார்கள். அவர்களுடைய நடையிலே ஒரு நிதானம் இருக் கும். நமக்கு அது தெரியாது. ஞானிகளுடைய மனம் அப்படித் தான் நடுநிலையில் இருக்குமாம். உலகத்தில் மற்றவர்களைப் போல ஒரு தொழில் செய்து வந்தாலும் அவர்கள் உள்ளம் சம நிலையிலிருந்து ஏறாமல் இறங்காமல் நிற்குமாம். இது ஒரு நாள் இரண்டு நாளில் உண்டாகிற நிலை அன்று. பல பிறப்புக்களிலே முயன்று கிடைக்க வேண்டிய அமைதி. ஒரு பிறவியால் ஒருவன் ஞானியாகிவிடலாம் என்று எண்ண முடியாது. அந்த நிலை வருவதற்கு முன் ஜன்மங்களில் அவன் உழைத்திருக்க வேண்டும். அந்த உழைப்பின் நிறைவை அவன் இந்த ஜன்மத்தில் அடை வான். அப்படி வருகிறவர்களை யோகப் பிரஷ்டர்கள் என்று சொல்வார்கள். அவர்களுடைய உள்ளம் துலாக்கோலைப் போலவே இருக்கும். நம்முடைய உள்ளமோ அதற்கு நேர்மாறாக ஒரேயடியாக மேலே போகிறது; அல்லது ஒரேயடியாகக் கீழே போகிறது. அக இருளும் புற இருளும் நம் முன்னால் எத்தனை பொருள்கள் இருந்தாலும் அந்தப் பொருள்களின் வண்ணத்தையும், வடிவத்தையும் காணாமல் மறைப்பது இருள். கண் இருந்தாலும், ஒளி இருந்தாலன்றி அதனால் பார்க்க முடியாது. இருட்டு, கண்ணைப் பயனற்றதாகச் செய்கிறது. பொருள் இன்ன இடத்தில் இருக்கிறது, இன்ன வண்ணத்தோடு இருக்கிறது என்று தெரிந்துகொள்ள முடியாமல் : செய்வது இருட்டு. புறத்தில் உள்ள இந்த இருள் வெளியில் உள்ள பொருள்களை அறிந்துகொள்ள முடியாமல் செய்வது போல, 38O