பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/414

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணாரக் காணும் காட்சி பட்டர். அவர் பார்க்கின்ற திசை எல்லாம் எம்பெருமாட்டியைக் காணும் அநுபவத்தைப் பெற்றவர். அவர், 'பார்க்கும் திசைதொறும் பாசாங் குசமும் பனிச்சிறைவண்டு ஆர்க்கும் புதுமலர் ஐந்தும் கரும்பும்என் அல்லலெல்லாம் தீர்க்கும் திரிபுரை யாள்திரு மேனியும் சிற்றிடையும் வார்க்குங் குமமுலை யும்முலை மேல்முத்து மாலையுமே” என்று பாடுகிறார். பாட்டுக்கு ஒரு முடிவு இருப்பதாகத் தோன்ற வில்லை. பார்க்கும் திசைகளில் எல்லாம் இப்படி இப்ப .' என்று அலங்காரத்தோடு சொல்லிக்கொண்டே வருகிற ர் அப்படியே மெய் மறந்து ஆனந்தவசப்பட்டு விடுகிறார். ஆ ைத அதிசயம் வரும்போது அப்படித்தான் வார்த்தை முடிவடையாமல் இருக்கும். ஒரு கையில் பாசம், ஒரு கையில் அங்குசம், ஒரு கையில் கரும்பு வில், ஒரு கையில் மலர்ப் பானங்கள், என் மனத்தில் தோற்றுகிற துன்பங்கள் எல்லாவற்றையும் நீக்குகிற மகா செளந்தர்யம் நிரம்பிய திருமேனி, சிறிய இடை, கச்சைக் கட்டிய நகில், திருமேனியில் தோன்றும் முத்து வடம் இவை எனக்குத் தோன்றுகின்றன" என்று சொல்ல வந்தவர், அப்படியே எம்பெருமாட்டியின் திருமேனி லாவண்யத்தில் சொக்கி வாக்கியத்தை முடிக்காமல் விட்டுவிடுகிறார். அவருக்குப் பார்க்கும் திசைதோறும் அபிராமியின் திருவுருவம் தோன்றியது. செங்கோடைக் குமரன் என எங்கே நினைப்பினும் அங்கேயென் முன்வந்து எதிர்நிற்பனே என்கிறார் அருணகிரிநாத சுவாமிகள். அநுபவம் வர வழி இவர்கள் அநுபவிக்கின்ற அநுபவம் நமக்குக் கிடைக்கிறது இல்லையே, ஏன்? பார்க்கும் திசைதொறும் எம்பெருமாட்டியின் க.சொ.V1-26 405