பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/416

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணாரக் காணும் காட்சி அருணகிரிநாத சுவாமிகளும், அபிராமிபட்டரும் அநுபூதி யில் ஒரே நிலையில் இருந்தவர்கள்; உள்ளம் தெளிவு பெற்று, அந்த உள்ளத்தில் இறைவனுடைய திருவுருவத்தைக் கண்டு, பின்பு முறுகிய பேரன்பினால் உள்ளே கண்டதை வெளியில் காணப் பயின்றவர்கள். பிடித்த படமும் காட்டும் படமும் ஓரிடத்தில் ஒருவன் இருந்து படம் பிடிக்கிறான். அப்படிப் பிடித்த படத்தைத் தனியாக வேறு ஓர் இருட்டறையில் கொண்டு வந்து கழுவுகிறான். கழுவின பிறகு படம் உருவாகிறது. அதன் பின்பு திரை கட்டி அந்தப் படத்தை வைத்துக் காட்டினால் திரையில் அந்த உருவம் தெரிகிறது. சினிமாத் திரையில் தெரிகிற உருவம், முன்னாலே தோன்றிய உருவத்தை எடுத்த பட வரிசை யிலிருந்து விளைந்த விளைவு. நடித்த காட்சியை முதலில் படம் பிடிப்பது, அதன் பின்பு பிடித்த படத்தைக் கழுவித் தெளிவாக்கு வது, பின்பு அந்தப் படத்திலிருந்து திரையில் காட்சியைத் தோற்றச் செய்வது ஆக மூன்று நிலையைச் சினிமாவில் பார்க்கிறோம். அவ்வாறே கோயிலிலே ஆண்டவனைக் காண்பது, பின்பு உள்ளத் தில் தெளிவாகக் காண்பது, பின்பு புறத்தில் காண்பது என்ற மூன்று நிலைகளை இங்கே பார்க்கிறோம். நாள்தோறும் ஆண்ட வன் திருக்கோயிலுக்குச் சென்று ஒரு பயிற்சியும் இல்லாமல் கும்பிட்டு வருவதில் பயன் இல்லை. அந்தக் கோயிலையே உள்ளத்தில் கொண்டு வந்துவிட வேண்டும். நம் உள்ளத்தில் கர்ப்பக் கிருகத்தைச் சிருஷ்டி பண்ண வேண்டும். உள்ளம் எம்பெருமானுடைய தரிசனத்தில் ஈடுபட வேண்டும். இப்படிப் பலகாலம் பயின்று, எப்போது நினைத்தாலும் தெளிவாக அந்தத் திருவுருவத்தைக் காணும் நிலை வந்துவிட்டால், அதற்கப்பால் புறத்தில் காணும் நிலையும் உண்டாகும். இந்த அநுபவத்தை அருணகிரியாரும், அபிராமிபட்டரும் சொல்கிறார்கள். Yor செங்கேழ் அடுத்த சினவடி வேலும் திருமுகமும் பங்கே நிரைத்தநல் பன்னிரு தோளும் பதுமமலர் 4O7