பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன மலர் போகிற இடங்களில் யாவர் நெஞ்சிலும் பயத்தை உண்டாக்கி னான். போகாத இடங்களில் உள்ளவர்களும், "ஐயோ! படுபாவி வந்துவிடுவானே' என்று வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு நடுங்கினார்கள். - அவனோ அச்சம் என்பதை அறியாமல் இருந்தான்; எல்லோ ரையும் அச்சம் கொள்ளச் செய்தான். எங்கும் கொடுமையைப் பரப்பினான். தேவர்கள், கந்தருவர்கள், வித்தியாதரர்கள், யrர்கள், கின்னரர்கள் - யாவரும் அஞ்சி நடுங்கினர். எங்கும் ஒரே பயம்! சூர பயங்கரன் இத்தகைய நிஷ்டுரம் உடையவனை -பகட்டைப் போலப் பொருதவனை - இந்திர லோகத்தை முட்டும்படியாக எட்டின வனை, அழிக்கப் புறப்பட்டான் முருகன். அவன் நெஞ்சில் பயத்தை உண்டாக்கினான். முருகனுடைய வீரச் செயலைக் கண்டு அதுகாறும் அச்சத்தை அறியாத சூரன் அச்சமுற்றான். எல்லாருக்கும் பயங்கரனாக இருந்த சூரனுக்குப் பயங்கரனாக முருகன் விளங்கினான். அவனை விளித்து இந்த விண்ணப் பத்தைச் சொல்கிறார் அருணை முனிவர். புண்டரீகன் அண்ட முகட்டைப் பிளந்து வளர்ந்து இந்த்ர லோகத்தை முட்ட எட்டிப் பகட்டிற் பொருதிட்ட நிட்ரே சூர பயங்கரனே! அடக்குவார் இல்லாமல் வளர்ந்து கொடுமை செய்த அவனை அடக்கினவன் முருகன். அடக்க முடியாமல் ஓடிக் கொடுமை செய்யும் மனத்தை அடக்க அந்த முருகனே வழி காட்டுவான் என்ற பொருத்தத்தால் அந்த வரலாற்றை இங்கே நினைக்கிறார். 女 தகட்டிற் சிவந்த கடம்பையும நெஞ்சையும் தாளிணைக்கே புகட்டிப் பணியப் பணித்தரு ளாய்,புண்ட ரீகன் அண்ட 29