பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/429

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 ஸ்டேஷனில் கண்ட நண்பனோடு பேசிக் கொண்டே இருந்தால், வண்டி வந்து நிற்பதுகூட மறந்துவிடும். வண்டி நிற்கிற வரைக் கும் அவனோடு பேசலாமே என்று ஆரம்பித்தவன் வண்டி புறப்பட்ட பிறகும் பேச்சுச் சுவாரசியத்தில் அதை மறந்து நிற்பான். இப்படித்தான் இந்த உலகத்தில் தோன்றிய மனிதன் இருக்கிறான். தன்னுடைய சரீரத்தைக் காப்பாற்றுவதற்குப் பலபேருடைய துணையை நாடுகிறான். இதனை வளர்ப்பதற்கும் சுகம் பெறுவ தற்கும் பல செயல்களைச் செய்கிறான். நாளுக்கு நாள் பல பேருடைய தொடர்பும் ஏற்படுகின்றது. இந்தத் தொடர்பினால் நட்பும் பகையும் விளைகின்றன. நட்புக் காரணமாக மகிழ்ச்சி யும், பகை காரணமாக அச்சமும் துன்பமும் அடைகிறான். 'உலகத்தில் இருக்கும்போது ஏதாவது செயல் செய்யத்தானே வேண்டும்? மற்றவர்களோடு பழகத்தானே வேண்டும்?' என்ற கேள்விகள் எழலாம். பழகுவது வேறு, பதிவது வேறு. பிள்ளைப் பூச்சி சேற்றிலே பல காலம் ஊர்ந்து கொண்டிருந்தாலும் சேறு ஒட்டாமலே வளைய வருகிறது. அதுபோல் நாம் எல்லாவற் றோடும் பழகிக் கொண்டிருந்தாலும் அவற்றோடு ஒட்டாமல் வாழப் பழக வேண்டும். நம்முடைய லட்சியம் இன்னதென்று தெரிந்து வாழ வேண்டும். பற்றின்றி வாழ்தல் சமுதாயத்திற்கு வேண்டிய காரியங்களைச் செய்து கொண்டு, அவ்வப்போது நமக்குத் துணையாகின்றவர்களோடு அன்பு செய்து வாழ்வது தவறு அன்று. ஆனால் அப்படி வாழ்கின்ற இடத்திலும், பழகுகின்ற மனிதர்களிடமும் பற்று வைத்து, எந்தக் காலத்திலும் பிரியாமல் இருக்க வேண்டுமென்ற உணர்ச்சியைக் கொள்வது ஆபத்தை உண்டாக்கும். நம்மோடு பிறப்பிலே தொடர்ந்து வந்து இறக்கும் வரைக்கும் இருக்கும் இந்த உடம்பே வாழ்நாள் முடிந்தவுடன் நம்மைப் பிரிந்து விடுகிறது; அல்லது நாம் இதைப் பிரிந்து விடுகிறோம். அப்படி இருக்க, பிறந்த பிறகு தொடர்ந்த தொடர்புகள் நம்மோடு ஒட்டிக் கொண்டிருக்குமா? ஒட்டிக் கொண்டிராதவற்றை மனத்திலே பற்றிக் கொள்வதுதான் பற்று. அப்படிப் பற்று வளர்வதனால் மனத்திலே துயரம் மிகு கிறதேயன்றி அமைதி உண்டாவதில்லை. 420