பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/435

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 திற்குமிடையே நின்று இதுவோ அதுவோ என்று சந்தேகப் பிறவிகளாகத் திண்டாடுகிறோம். ஒரு பக்கத்தில் நம்முடைய எண்ணங்கள் இருக்கின்றன. மற்றொரு பக்கத்தில் பிறருடைய உபதேசம் இருக்கிறது. இருதலைக் கொள்ளியிடை எறும்பு போல, இன்னதுதான் செய்வது என்று தெரியாமல் அப்போது திண்டாடுகிறோம். எண்ணத்தில் திண்மை இல்லாமையினால் வந்த விளைவு இது. இப்படியும் இருதலைக் கொள்ளி எறும்பு நிலை ஒன்று உண்டு. இறைவனுடைய திருவருளைப் பெற வேண்டுமென்று முயலும் போதுகூடப் பல சமயங்களில் இப்படி இரண்டு வேறு எண்ணங் கள் வந்து மோதுகின்றன. இறைவனுடைய திருநாமத்தைச் சொல்லித் திருவுருவத்தைக் கண்டு பக்தி செய்ய வேண்டுமென்று நம்முடைய பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள். நாம் அதை நம்பி வருகிறோம். ஆனால் ஒரு சாரார், இறைவன் குணம் குறி கடந்தவன், அவனுக்கு விக்கிரகம் கூடாது என்று சொல்லுகிறார் கள். நம்முடைய முன்னோர்கள் சென்ற நெறியும், புதிய அறி வாளிகள் சொல்லும் நெறியும் ஒன்றுக்கொன்று மாறுபாடாகத் தோற்றுகின்றன. அவற்றின் நடுவில் நின்று இன்னது செய்வது என்று தெரியாமல் நாம் திகைக்கிறோம். இது ஒருவகை இரு தலைக் கொள்ளி எறும்பின் நிலை. தர்ம சங்கடங்கள் உலக வாழ்க்கையில் எத்தனையோ தர்ம சங்கடங்கள் உண்டாகின்றன. இரண்டு வகையான தர்மம் ஒன்றுக் கொன்று எதிராக நிற்கும்போது தர்ம சங்கடம் எழுகிறது. ஒரு பாம்பு இரையை உண்ண வருகிறது. அப்போது பாம்பை அடித்தால் அதைக் கொன்றவர் ஆகிறோம். அடிக்காமல் இருந்தால் இரை யாகிற பிராணியைக் கொலை செய்தது போன்ற துயரம் வருகிறது. இந்த இரண்டுக்கும் நடுவில் நின்று திகைக்கிறோம். தர்ம சங்கடமான நிலை அப்போது வருகிறது. - இப்போது எங்கே பார்த்தாலும் விஞ்ஞானத்தைப் பற்றிய பேச்சாக இருக்கிறது. மனிதன் வாழ வேண்டுமானால் விஞ்ஞானத் தின் முயற்சியும், தொழில் முயற்சியும் சிறந்து நிற்க வேண்டு: மென்று அரசியல் தலைவர்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். 426