பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/439

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 படைவீடு கொண்டான். அங்கே இருந்துதான் யுத்தத்திற்குப் புறப் பட்டான். ஆகவே அவன் அங்கே போர் வீரனாக எழுந்தருளி யிருந்தான். பின்பு வெற்றி யபிஷேகமும் அங்கே நடைபெற்றது. ஐயத்தைக் கொண்டாடியமையால் ஜயந்தி என்ற பெயர் அதற்கு உண்டாயிற்று. முருகன் வீரனாக, சேவகனாக அங்கே எழுந்தருளி யிருக்கிறான். தெள்ளிக் கொழிக்கும் கடல்செந்தில் மேவிய சேவகனே! அலைகள் முருகப் பெருமானுக்குக் கோடிக்கணக்காக முத்தங்களைக் கொண்டு தருகின்றனவாம். கடற்கரையில் அலை மோதும்போது கரை குலைவதை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் இங்கே அருணகிரிநாதப் பெருமான் அதைச் சொல்ல வில்லை. அலைகளால் நலம் விளைகிறது என்று சொல்கிறார். அலைகள் கோடிக்கணக்கான முத்தங்களை கொண்டு வந்து சேர்க்கின்றனவாம். நம்முடைய உள்ளத்தில் கூடத் துயர் அலை மோதும்போது நாம் கவலை அடைகிறோம். மணல் கரையாக நம் உள்ளம் இருப்பதுவே காரணம். அப்படியின்றி இறைவனுடைய திருக்கோயிலாக இருக்குமானால் உலக வாழ்க்கையில் வந்து வந்து மோதுகின்ற சுக துக்கமாகிற அலைகளிலிருந்து கிடைக் கின்ற அரிய முத்தங்களாகிய உண்மைகளைத் தெரிந்து கொள்ளலாம். சேவகன் அங்கேயுள்ள எம்பெருமான் சேவகனாக, பெரு வீரனாக இருக்கிறான். வீரம் உடையவனை அழகிய பெண்கள் நாடி வருவார்கள். வீரம் உடையவனைக் காதல் செய்ய விரும்புவது அழகிகளின் இயல்பு. இங்கே வீரத்தினால் சூரபன்மாவை அழித்த எம்பெருமான் வள்ளி நாயகனாக விளங்குகிறான். வீரரில் சிறந்த வீரனாகிய ஆண்டவன் பேரழகு உடையவன். அவனுக் குள்ள செல்வத்துக்குக் குறைவு இல்லை. அவனே அறிவிற் சிறந்த ஞான மூர்த்தியாக இருக்கிறான். ஆடவருக்கு வேண்டிய எல்லா நலங்களும் ஒருங்கே பொருந்திய அந்தப் பெருமானை மணவாளனாக அடைய வேண்டுமென்றால் எத்தனையோ தவம் செய்திருக்க வேண்டும். வள்ளியம் பெருமாட்டி அந்தத் தவம் உடையவள். அவளுக்கு அவன் காதலனாக வாய்த்தான். பேரழகி யாகிய வள்ளி பெருங் கருணையுடைய எம்பெருமானை அடைந் 43O